மனிதம் மிளிர்கிறது

Monday
மனிதம் என்றால் என்ன? இறைவன் தன் கலீஃபாவாக படைத்துள்ள மனிதப் பிறவிகள், தங்களை ஒருவரையொருவர் உள்ளப்பூர்வமாக நேசித்து ஒருவருக்கொருவர் கண்ணியம் காப்பது எப்படி?

சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, வாழ்க்கை மார்க்கமான இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம், குறிப்பாக தமிழக முஸ்லிம் இயக்கத் தலைமைகள் "மனிதத்தையும் கண்ணியத்தையும்" குறித்துத் தனியாகப் பாடம் பயில வேண்டும்.

எனக்கு மெயிலில் வந்த இந்த உணர்வுப்பூர்வமான, அருமையான ஆக்கத்தை "மனிதத்தன்மையற்ற, சகோதரர்களின் கண்ணியம் பேணாதவர்களுக்காக" சமர்ப்பிக்கிறேன்.

- அப்துல் ரஹ்மான்





அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ளகுறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்துகொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்குவந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாகஅமைந்தது..

அவர்
குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மனவேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார். “...... இறைவன் படைப்புகள்எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச்சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்தஎத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால்சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ளமுடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவைதான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்யமுடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளதுஎன்பதை எப்படி நம்மால் கூற முடியும்?”

அவர்
உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்தமனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள். அந்தத்தந்தை சொன்னார். “நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப்படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும்மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்தஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” அவர் அந்த நிகழ்ச்சியைமிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

ஒரு
நாள் மதிய வேளையில் அவரும் அவர் மகன் ஷாயாவும் ஒருவிளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்தமைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்துதன் தந்தையிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்தவிளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”

அவருக்குத்
தன் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாடமுடியாது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த சிறுவர்களோ மிகத்தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம்சென்று கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர் முயற்சி செய்து பார்ப்பதில்தவறில்லை என்று எண்ணினார். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம்கேட்டார். “என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக்கொள்வீர்களா?”

அந்த
சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன்குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன்நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன்ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாகஅவரிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில்இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில்இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்

அதைக்
கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்ததந்தையின் மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையைமாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால்அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவைசேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத்தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களாஎன்ற சந்தேகம் அவன் தந்தைக்கு வந்தது.

ஆனால்
சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனைஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்றுசொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப்பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும்என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும்ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின்அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக்கொண்டான்.

பந்தெறிபவன்
அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவேவீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தைஅடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு பந்தெறிபவன் காலடியில்வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால்ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும். ஆனால் அந்தப்பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச ஷாயாவின்அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம்திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்தபோது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில்பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்துமுடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப்பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடிவீசினான்.

மைதானத்தில்
ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடுஎன்றசத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலைதெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள்எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது
ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டுஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்டநாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாதமகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

அதைச்
சொல்லும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர். “அன்றையதினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவைஎனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவுமகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்குஇருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்கமுடியாத நாளாகி விட்டது....”

அந்த
சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள்எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம்
காட்டிய
அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனைவெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.

இது
போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்தவிளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச்செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்துஅந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது
போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும்வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறியவிட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில்ஏற்படுத்த முடியும்.
அதுவே
மனிதம்.

இந்த
மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றைநிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாகஅல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அதுபோன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம்  முயற்சிப்போமா?




 நன்றி: பாத்திமா ருஸ்தா மகரூப்   

செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!!!

Wednesday
''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!யே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911)

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்: புகாரி 56)

''உண்ணும் போதும்இ உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.'' (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத் 19160)

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்: முஸ்லிம் 2915)


''பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்: முஸ்லிம் 2913)

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்: புகாரி 5204)

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்இ ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்கள்: அபூதாவூத் 1830இ அஹ்மத் 19162)

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்: திர்மதி 1082)

''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்: அபூதாவூத் 1442)

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.

ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.

பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.

பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்: புகாரீ 5200)

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள்.

வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள்.

அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.'' (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹுஇ நூல்: புகாரீ 2481)

பிறையும் பிளவும் - II

Monday
கணிப்பீடானது தெளிவற்றது

இப்னு தைய்மிய்யா அவர்களின் கருத்தில் வானியல் கணிப்பீடானது தவறாக வழிகாட்டக்கூடிய தடுக்கப்பட்ட செயலாகும். அதன் புதிரான தன்மை அதன் நியாயத்தினைவிட வெளிப்படையானதாகும். இதனை ஆதாரப்படுத்த அவர்கள் நபி (ஸல்) அவர்களினுடைய பல்வேறு அறிவிப்புக்ககளை ஆதாரமாக காட்டுகின்றார்கள். (தகீக் அத்-தீன்,பகுதி.01,பக்.62) 

மேலும், அவர்கள் கூறுகையில் வானியல் கணிப்பீடு என்பது முற்றிலும் பொய்யானதும், ஏமாற்று வழியுமாகும் எனக் குறிப்பிடுகின்றார். 

'வானியல் சாஷ்திரத்தில் புகழ் பூத்த தலைவர்களுடன் நான் தர்க்க ரீதியான வாதங்களை கொண்டு அதன் பிழையான தன்மையினை நிரூபித்தேன். அவர்களில் ஒருவர் என்னிடம் கூறுகையில் ' கடவுளின் பெயரால், நாங்கள் ஒரு மெய்யுடன் பல்வேறு பொய்களை இட்டுக்கட்டினோம் எனக் கூறினார்.' (தகீக் அத்-தீன், பகுதி.01, பக். 62)

இந்நிலமைக்கு மாற்றமான கருத்துக்களும் அதன் மீதான தடைகளும் இஸ்லாத்தில் மிக அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்களினால் கூறப்பட்டதாக அல்- முஸ்லிமில் எடுத்துரைக்கப்படும் பின்வரும் ஹதீஸ் இதற்கு போதுமான சான்றாகும். 'யார் சாஷ்திரக்காரர்களை அணுகி மறைவான விடயங்களை பற்றி கேட்கின்றனரோ அவர்களின் நாற்பது நாட்கள் மேற்கொண்ட நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.' இங்க ஹதீஸில் குறிப்பிடப்படுகின்ற 'அர்ரஅப் என்ற வார்தையானது மாயா ஜால வித்தைக்காரர்கள், மந்திரவாதிகள், சாஷ்திரக்காரர்கள் போன்றோரைக் குறிக்கின்றது. (தகீக் அத்-தீன், பகுதி.01,பக். 63)


பெரும்பான்மையினரது வாதத்தின் சுருக்கப்பொருள்

இஸ்லாமிய மாதத்தினை தீர்மானிப்பதில் மிகவும் வலிதான வழிமுறை கணிப்பீடாகும் என்பதற்கு மாற்றமான கருத்தினையே இவர்கள் கொண்டிருக்கின்றனர்.

1. இஸ்லாமிய மாதத்தினை ஆரம்பிப்பதிலும் அதற்கு பிரியாவிடை அளிப்பதிலும், விசேடமாக றமழான் மாதம், புலக்கண்ணால் பிறையினை காண்பதென்பது இஸ்லாமிய சட்டத்தினால் அவசியமாக்கப்பட்டதாகும். இத்தகைய முறையின் வாயிலாக மாத்திரமே அதன் நிச்சயத்தை (certainty) உறுதிசெய்து கொள்ளவியலும். இவ்வறிஞர்களின் கருத்தில் மெய்க்கண்ணால் பார்ப்பதுவே நோக்கம் அன்றி அவர்கள் அதனை ஒரு வழிமுறையாக கருத்திற்கொள்ளவில்லை. அவர்கள் புலக்கண்ணினால் காண்தல் அல்லது நோக்குதல் எனக்காட்டுவது எமது புலக்கண்களுக்கு தோன்றுவதனையே. மேலும் இவர்கள் குறிப்பிடுகையில், இஸ்லாமிய மாதத்தினை உறுதிப்படுத்துவது புலக்கண்ணினால் பார்ப்பதனூடாகவோ அல்லது நாட்களை 30ஆக பூர்த்தி செய்துகொள்வதன் ஊடாகவோதான் என்பதில் நவீன இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்தொற்றுமை காணப்படுகின்றது என்கின்றனர். நபி (ஸல்) அவர்களினுடைய வார்த்தையில் காணப்படும் 'மேக மூட்டம் காணப்படுகின்றவிடத்து எண்ணிக்கொள்ளுங்கள் அல்லது கணக்கிட்டுக்கொள்ளுங்கள்' என்பது 30 நாட்களாக பூர்த்திசெய்தல் வேண்டும் என வலியுறுத்துகின்ற மற்றய அறிவிப்புக்களுடன் வைத்து விளங்கிக்கொள்ளப்படுதல் இன்றியமையாததது என்பது இவர்களுடைய கருத்தாகும்.

இதனை இமாம் இப்னுதைமிய்யா அவர்கள் விளக்குகையில்;

'கருத்தொருமைப்பாடு என்பது சட்டவியல் அறிஞர்கள் இஸ்லாமிய சட்ட விதிகளில் ஒன்றினை ஆர அரவணைத்து ஏற்றுக்கொள்கையில்தான் உருவாகின்றது. எந்தவொரு நபரும் அதனை மறுக்கவோ, அதனை எதிர்க்கவோ அனுமதியில்லை. ஏனெனில், இயல்பாகவே தவறாக காணப்படும் ஒன்றை சமூகம் ஏற்றுக்கொள்ளாது.' (தகீக் அத்-தீன், பகுதி. 20,பக்.20)


'உண்மை யாதெனில், எவர் ஒருவர் தீர்க்கமான உடன்பாடொன்றிற்கு எதிராக செயல்படுகின்றாரோ அவர் உண்மையில் நிராகரிக்கும் செயலை மேற்கொள்கின்றார். இந்நடவடிக்கை எவ்வாறானதெனில் தீர்க்கமாக காணப்படுகின்ற வேத வாக்கினை நிராகரிப்பது போன்றதாகும்.' (தகீக் அத்-தீன், பாகம்.20, பக்.10)


2. கணிப்பிடலானது வெறும் அதீத கற்பனையும்,மாய மந்திரங்களுமாகும். இவைகள் இஸ்லாமிய மாதத்தினை தீர்மானிப்பதற்கு எதுவித அதிகாரம் வாய்ந்த முறைகளையும் காட்டித்தர வல்லன அல்ல. இப்னு தைமிய்யா, அல் ஜஸ்ஸாஸ் போன்ற நவீன சட்டவியல் அறிஞர்களும் கூட இத்தகைய முறையினை நிராகரிப்பதில் கருத்தொருமித்து காணப்படுகின்றனர்.

3. இக்கணிப்பிடலானது சமூகத்தில் ஒரு சிலருக்கு மாத்திரம் தெரிந்த விடயமாக காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அது சிக்கல் தன்மையினை உண்டுபண்ணி விடுகின்றது என இமாம் நவாவி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

4. கணிப்பிடலுடன் தொடர்புபட்ட மற்றும் கிரக நிலைகளின் அசைவுகளையும், அதன் மறைந்து பிரகாசிக்கும் நிலைகளையும் வைத்துக் கொண்டு அதிஷ்டத்தினை எதிர்வு கூறுவதோ அல்லது முன்னறிவிப்பு செய்வதென்பதும் மாயா வித்தைக்காரர்களின் செயற்பாடாகும். இவை இஸ்லாமிய சட்டத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டதொன்றாகும். இத்தகையவர்களுடன் அலி (றழி) அவர்கள் தோழமையாக பழகுவதனை கூட நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள் என அறியக்கிடைக்கின்றது. (அபூ தாவூத்)

5. அன்று மதீனாவில் வாழந்த யூத சமூகம் மாதத்தினை உறுதிசெய்துகொள்ள கணிப்பீட்டினை பயன்படுத்தியதனை அறிந்து வைத்திருந்த நபி(ஸல்) அவர்கள் அத்தகைய கணிப்பிடலை பயன்படுத்துவதனை தடைசெய்தார்கள். யூத வருட கலண்டரானது கி.மு 363ல் சு. ஹில்லல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மதீனாவில் வாழ்ந்த யூத சமூகம் பின்பற்றி வந்தது. முஸ்லிம்கள் தமது மாதங்களை உறுதிசெய்துகொள்ள யூதர்களின் வழிமுறைகளை கைக்கொண்டு விடுவார்களோ என்ற நோக்கிலேயே நபி (ஸல்) அவர்கள் அதனை தடைசெய்தார்கள் என்றால் அது மிகையல்ல. அதுவே பெருமானாரினுடைய எண்ணமாகவும் இருந்தது.

6. மார்க்க விடயங்களில், அதாவது றமழான் மற்றும் ஷவ்வால் மாதங்களை துவங்குவதிலும், அதனை முடிவறுத்திக் கொள்வதிலும் கணிப்பிடலினை நாம் பிரயோகிப்போமானால் அது வணக்கத்தின் உயிரோட்டத்தில் இடரினை உருவாக்கிவிடும். அத்தோடு, 'நீங்கள் பிறையினை காணும் வரை நோன்பினை ஆரம்பிக்காதீர்கள், பிறையினை காணும் வரை நோன்பை முடித்தும் கொள்ளாதீர்கள்' என்ற நபி(ஸல்) அவர்களின் தெளிவான கட்டளைக்கு மாற்றம் செய்வதாக அமைந்துவிடும். இதனால் முஸ்லிம்களில் எவராவது ஒருவர்; இத்தகைய நபி (ஸல்) அவர்களின் அழுத்தம் திருத்தமான கட்டளைக்கு மாற்றமாக கணிப்பிடலை மையமாக கொண்டு நோன்பினை ஆரம்பிப்பாராக இருந்தால் அவை வெறும் அலங்கார நாட்களாகவே அமையும்.

7. புதிய பிறைக்கு அராபியில் ஹிலால் எனப்படுகின்றது. மொழி இலக்கணத்தில் ஹிலால் என்பது 'ஒளியின் பிரதிபலிப்பாகவும்', 'இருளாகவன்றி மின்னி பிரகாசிப்பதாயும்' அமைந்திருத்தல் அவசியம். மின்னி பிரகாசிப்பதென்பது மனிதனுடைய புலக்கண்களுடன் தொடர்புற்ற நிலையாகும். எனவே நாம் புதிய பிறையினை காணும்வரை எம்மால் பதிய மாதத்தினை ஆரம்பிக்கவியலாது. இவ்வாதமானது ஹிலால் என்ற சொல்லின் மொழி இலக்கணத்தின் அடியாக பிறந்ததாகும். 

இப்னு மன்சூர் அவர்கள் ஹிலால் என்ற செயல்லுக்கு பின்வரும் விளக்கத்தினை அளிக்கின்றார்கள்;

"அல்-ஹிலால் என்பது புதிய மாதம் ஆரம்பிக்கும் நிலையில் மக்களினால் அவதானிக்கப்படும் பதிய (வளரும்) சந்திரனின் வெள்ளை வெளீர் என்ற பிரகாசமாகும். மாதத்தினுடைய முதல் இரு இரவுகளில் தோன்றும் சந்திரனின் தோற்றம் ஹிலால் என அழைக்கப்படும். பின்பு அது 'கமர்' என அழைக்கப்படும். என்றாலும், மாதத்தின் முதல் மூன்று இரவு மட்டும் காணப்படுகின்ற சந்திரனை கூட ஹிலால் என அழைப்பதுமுண்டு. இன்னும், சந்திரனின் கால் பகுதி அளவான பகுதிவரையும் அதனை ஹிலால் என அழைப்பதுவுமுண்டு. மேலும், இருள் நீங்க, சந்திரனின் உன்னதமான அழகான பிரகாசம் நீண்டு ஜொலிக்கும் அளவு வரை அதனை ஹிலால் என அழைப்பதும் உண்டு. இந்நிலமை ஏழாவது இரவு வரை நிகழ முடியாது." (லிஸான் அல்- அரப்)

இஸ்லாமிய சந்திர மாதமானது புலக்கண்ணால் சந்திரனை காண்பது அல்லது மாத்தினை 30ஆக பூர்த்திசெய்வது அல்லாத வேறு வழிமுறைகளை கையாள்வதன் மூலமாக தீர்மானிக்கப்பட முடியாதது என்பது மேற்கூறிய சட்டவியல் அறிஞர்களின் கருத்துக்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடிகின்றது. இதுவே சாதாரணமாக அறியப்பட்டதும், உண்மைத் தன்மை வாயந்ததும் அதிகாரபூர்வமானதுமாகும். ஆனாலும் இவற்றுக்கு நடைமுறை ரீதியிலான விலக்கான சில சந்தர்ப்பங்களும் உள்ளன.

மேலாக, மேக மூட்டமாக இருக்கையில் ஷஅபான் மற்றும் றமழான் மாதத்தினை 30ஆக பூர்த்திசெய்து கொள்வது அல்லது அடிவானம் தெளிவில்லாத போது றமழானை ஷஅபான் மாதத்தின் 29ம் நாளில் ஆரம்பித்துவிடுவது என்பன நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துவிடுகின்றன. அதாவது, றமழானை சிலவேளை 28லும், இன்னும் சிலவேளை 31லும் முடிவறுத்திக்கொள்ள வாய்ப்பாய் அவை அமைந்துவிடுகின்றது.

இப்பிரச்சினை தொடர்பிலான பகுப்பாய்வினை Dr. ஷபாத் அஹமத் அவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்;

தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் கருவிகளின் பயன்பாடு என்பனவற்றின் அடிப்படையில் ஊண்மையாக கணக்கிடுதல் என்பது நிச்சயதன்மையற்றது. அவை நேரத்திற்கு நேரம், இடத்திற்கு இடம் மாறுபாடுடையது. எவ்வாறாயினும் மக்கள் எல்லா நிலமைகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒரளவு நிச்சயமானதும், இலகுவானதுமான விதியினை பிரயோகிக்க முயற்சிக்கிறார்கள். அதனை நிறைவேற்ற இலகுவான ஒரு வழிமுறை மாத நாட்களின் எண்ணிக்கையில் தெளிவில்லாத போது அதனை 29 அல்லது 30 என எடுத்துக்கொள்வதாகும். எனினும், அங்கு அதேதொகை நாட்கள் ஷஅபானுக்கும் றமழானுக்கும் பிரயோகமாகுமா எனும் வினா எழுகின்றது. அடிவானம் தெளிவில்லாத வேளை, இருமாதங்களும் அதே தொகை நாட்களை கருத்திலெடுக்க வேண்டுமா (29 அல்லது 30) அல்லது அவற்றில் ஒரு மாதத்தினுடைய நாட்களை 29 அல்லது 30ஆக எடுத்துக்கொள்வதா என்பது பின்வரும் நான்கு விடைகளில்தான் தங்கியுள்ளது.

அ) ஷஅபான் மாதத்தின் 29ம் நாள் தெளிவில்லாது இருக்குமானால் அம்மாதத்தினை 30 ஆக எடுத்துக்கொள்ளுவதுடன் றமழான் மாதத்திற்கும் இதே நிலமையினை பிரயோகித்தல்.

இதன்போது, நீங்கள் 30 நாட்களுக்கு மேலதிகமாக ஒரு போதும் நோன்பினை நோற்கமாட்டீர். சிலவேளை நீங்கள் 28 நாட்கள் மாத்திரம் நோன்பு நோற்க வேண்டியிருக்கும். ஆனால் ஒருவேளை ஷஅபான் மற்றும் றமழான் மாதங்கள் 29ஆக இருக்கின்றன. ஆனால் ஷஅபான் 29ல் மேக மூட்டமாகவும், றமழான் மாதத்தின் 29ம் நாள் தெளிவாகவும் இருக்கின்றன எனில், நீங்கள் ஷஅபானை 30 ஆக கணக்கிடுவதுடன், றமழான் மாதத்தின் ஒரு நாளை இழக்க நேரிடும். ஆனாலும், றமழான் 29ல் வானம் தெளிவாக இருக்குமானால் உங்களால் றமழான் பிறையினை (ஹிலால்) காணமுடியும். கரிபியன் தீவுகள், டிரினிடாட், கயானா முதலிய மேக மூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் இம்முறைமை 28ற்கு குறையாத நோன்பு நோற்றலை உறுதி செய்யும்.

ஆ) ஷஅபானின் 29ம் நாள் தெளிவில்லாது இருக்குமானால் அம்மாதத்தினை 29ஆக எடுத்துக்கொள்வதுடன் றமழான் மாதத்திற்கம் இதே நிலமையை கையாளல்.

இதன்போது, நீங்கள் ஒருபோதும் 29 நாட்களுக்கு குறைவாக நோன்பு நோற்கமாட்டீர்கள். ஆனால் சிலவேளை நீங்கள் 31 நாட்கள் அல்லது அதற்கு அதிகமாக நோன்பு நோற்க நேரிடுவதுடன், பெருநாளினையும் கொண்டாட நேரிடும். ஷஅபான் மாதத்தினை 29 நாட்களுக்கு மட்டுப்படுத்தியதன் காரணமாக, நீங்கள் ஷஅபானை 29 நாட்களாக எடுத்துக்கொள்வீர்கள். இருப்பினும் றமழான் 29ம் நாளில் வானம் தெளிவாக இருக்கும் போது நீங்கள் றமழான் இன்னும் நிறைவு பெற்றுவிடவில்லை என்பதனை அறிந்து கொள்வீர்கள். எனவே, நீங்கள் றமமழான் 30 நாட்கள் நோன்பு நோற்பதுடன், ஷஅபானின் ஒரு நாளிலும நோன்பு நோற்றிருப்பீர்கள். இன்னும் றமழானுக்கு முந்திய பல மாதங்களில் மேக மூட்டம் அவதானிக்கப்படுமாக இருந்தால் நீங்கள் 31 நாட்களைவ விட கூடுதலாக நோன்பினை நோற்க வேண்டியிருக்கும்.

இ) ஷஅபானின் 29ம் நாளில் வானம் தெளிவற்று காணப்படுமானால் அம்மாதத்தினை 29ஆக எடுத்துக்கொள்ளுங்கள ஆனால் றமழான் மாதம் 29ம் நாளில் வானம் தெளிவில்லை எனில் அம்மாதத்தினை 30ஆக எடுத்துக்கொள்ளுங்கள்.

இதன்போது, நீங்கள் 29 நாட்களுக்கு குறைவாக ஒருபோதும் நோன்பு நோற்க மாட்டீர்கள். எனிலும், சிலவேளை நீங்கள் 31 நாட்கள் நோன்பு நோற்க வேண்டியிருக்கும்.

இன்று நாம் எல்லோரும் வலியுறுத்துவது (அ) வில் குறிப்பிடப்படும் நிலமையினையாகும். அதாவது; வானம் தெளிவில்லா வேளை அம்மாதத்தினை 30ஆக பூர்த்திசெய்வதாகும். ஏவ்வாறாயினும், எமது வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டக் கூடிய விடயம் யாதெனில் மேற்கூறப்பட்ட அனைத்து வகையும் முஸ்லிம்களினால் இன்று பின்பற்றப்படுவதாகும். மறுபறம், றமழானை ஆரம்பிப்பதும் அதனை முடிவுறுத்திக்கொள்வதும் பல்வேறு ஹதீஸ்களினை ஆதாரம் காட்டி மேற் கூறியவாறே பொருள்கோடல் மேற்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.

மேலும், இங்கு புலக்கண்ணால் காண்பது என்றால் எவ்வாறு? அதன் முறைமை என்ன? என்பன முதலிய வினவுதலுக்கு எந்தவித சந்தர்ப்பமும் கிடையாது. ஏனெனில் நேரடியாக புலக்கண்ணால் சந்திரனை அவதானிப்பதே சட்டவியல் அறிஞர்களினால் கருத்தொருமிக்கப்பட்ட விடயம் என்பதுடன் அதுவே இஸ்லாமிய மாதத்தினை நிச்சயப்படுத்திக்கொள்ளவுமான அதிகாரம் வாய்ந்த முறையாகும். இந்த விடயத்தில் இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்கள் மத்தியில் பாரியளவு வேறுபாட்டினை நாம் அவதானிக்க முடிகின்றது. ஆகவே, புலக்கண்ணால் சந்திரனை பார்த்தல் என்பது எதுவித நிபந்தனையுமின்றி, கருத்து வேறுபாடுகளின்றிய இஸ்லாமிய விதி எனக்கொள்ள முடியாது. அது ஷரிஆவில் 'ஸன்னி' அல்லது ஊகிக்கப்பட்ட விடயம் அன்றி நிபந்தனைகள் எதுவுமற்ற 'கத்இ' என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படமாட்டாது.

பிறையும் பிளவும்

Saturday

சந்திரமாத கணிப்பும் : சட்டவியற் கருத்துக்களும்
வழமையாக றமழான் மாதம் வந்துவிட்டால் பிறை தொடர்பான சர்ச்சையும் சூடுபிடித்துவிடுவது இன்று எமது சமூகத்தில் வழமையாகிவிட்ட விடயம். ஆனால் இந்த சர்ச்சை அந்த றமழானோடு முற்றுப்பெற்றுவிடுவதும் பின்பு அடுத்த றமழானுக்காக அல்லது துல்ஹஜ் மாதத்திற்கு ஆற விட்டுவிடுவதும் பழகிய ஒன்றாகிவிட்டது. ஆரம்பத்தில் சர்வதேச பிறை, உள்ளுர் பிறை, நாட்டுக்கொரு பிறை, ஊருக்கொரு பிறை என்றெல்லாம் பிரிந்து கிடந்த எமது கருத்துக்கள் இன்று புளிச்சுப்போய் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது. என்றாலும் ஆங்காங்கு புளிக்காத சோறு இருக்கத்தான் செய்கின்றது. என்றாலும், இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளவென மாதத்தினை ஆரம்பிப்பதானது அதிலும் குறிப்பாக றமழானை அல்லது துல்ஹஜ் மாதத்தினை ஆரம்பிப்பது சந்திரனை வெற்றுக்ணகளால் (புலக்கண்களால் அல்லது நிதர்சனமாக) காண்பதன் ஊடாகவா? அல்லது வானியல் கணக்கின் வாயிலாகவா? என்ற சோறு இன்னும் பலருக்கு ருசியாகத்தான் தென்படுகின்றது. இத்தகைய கருத்துக்களுக்கு வாதப்பிரதிவாதங்களை முன்வைப்பவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களால் மிகவும் மதிப்பளிக்கப்படுகின்ற இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்களின் கருத்துக்களை கருத்திற்கொள்வது கிடையாது. சிலவேளை அவர்கள் அதனை கருத்திற்கொள்ள மறுக்கின்றார்களா? அல்லது கண்டும் காணாமலும் விட்டு விடுகின்றார்களா? என்ற ஐயமும் எனக்கு பலமுறை தோன்றியிருக்கின்றது. ஏனைய வணக்கவழிபாடுகளின் சிறு சிறு நுட்பமான விடயங்களுக்கு கூட இத்தகைய அறிஞர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கின்ற இவர்கள், அதனை பின்பற்றுவதன் உள்ளார்ந்த குணாம்சங்களை வெளிப்படுத்தியும் வலியுறித்தியும் வருகின்ற இவர்கள், சமூக ஒற்றுமையை கட்டாயம் வலியுறுத்தியேயாக வேண்டிய தருணங்களில் அவர்களின் சட்ட கருத்துக்களை ஓரங்கட்ட முற்படுவதும் தமது சுயகருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் என்போன்ற மாணவர்களுக்கு சங்கட நிலையினை உண்டுபண்ணுகின்றது. புலக்ண்களால் பிறையினை காண்பது மற்றும் வானியல் கணக்கின் ஊடாக பிறையின் வயதினை கணித்தல் என்பது உண்மையில் ஒரு பதிய வாதப் பொருளல்ல. இங்கு ஆராயப்பட இருக்கின்ற இருபக்க சான்றுகளும் அதற்கு பெரும் சான்றாகும்.

-              பெரும்பான்மையினரின் வாதம்
-              பெரும்பான்மையனரது வாதத்தின் கருப்பொருள்
-              'ஷஹித' என்ற சொல்லின் மீதான பொருளாய்வு.

கடந்த காலங்களில் இஸ்லாமிய சட்ட ஆய்வில் ஈடுபட்ட அனைத்து பிரிவினருடையதுமான  ஏகோபித்த தீர்மானம் யாதெனில் றமழான் மாதமானது கணிப்பிடலின் மூலமாக தீர்மானிக்கப்பட முடியாதது என்பதாகும். பொரும்பான்மை சட்ட ஆய்வாளர்கள் நோக்கில் வானியல் கணிப்பீடானது இயற்கைக்கு முறனானது என கருதப்படுகின்றது. இதனால், வணக்கங்களில் ஒன்றான றமழானினை ஆரம்பிப்பதென்பதும் அதனை நிறைவு செய்வதென்பதும் நிச்சயமற்ற ஊகங்களிலும், சாத்தியப்பாடுகிளிலும் நின்று மேற்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. யதார்த்தத்தில், இஸ்லாமிய வணக்க வழிபாடுகளுடன் தொடர்புறக் காணப்படுகின்ற றமழான், ஷவ்வால் மற்றும் ஹஜ் முதலிய மாதங்கள் ஒன்றில் புலக்கண்களால் அவதானிப்பதன் ஊடாக அல்லது நாட்களை 30 ஆக பூர்த்தி செய்வதன் ஊடாக மாத்திரமே தீர்மானிக்க முடியும்.

பெரும்பான்மையினரின் வாதம்

அல் குர்ஆன் கூறுகின்றது,
'றமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான், மனிதர்களுக்குவழிகாட்டடியாகவும், நேரான வழியை தெளிவாக்க கூடியதாகவும், நன்மைதீமையை பிரித்தறிவிக்க கூடியதாகவும் உள்ள அல் குர்ஆன் அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தினை அடைகிறானோ அவன், அதில் நோன்புநோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும்நோயாளிகளாகவோ....'(2:185)

இவ்சனத்தில் காணப்படுகின்ற 'fபமன் ஷஹித மின்கும் அஷ்'ஷஹ்ரா' (உங்களில்எவர் அம்மாத்தினை அடைகின்றாரோ) எனும் சொற்றொடரினை பெரும்பான்மை சட்ட அறிஞர்கள் விளக்குகையில் புலக்கண்களினால் பிறையினை காண்பதனை தேவைப்படுத்துகின்றனர். இவ்வாறன அவர்களுடைய பொருள் கோடலுக்கு பின்வரும் நபிகளார் (ஸல்) அவர்களுடைய ஆணையினை அவர்கள் அதிகாரப்டுத்துகின்றனர்.

"பிறையினை கண்டு நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், பிறையினை கண்டுநோன்பை விட்டுவிடுங்கள். மேக மூட்டமாக இருந்தால் ஷஹ்பான் மாதத்தின்நாட்களை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்." (புஹாரி)

"பிறையினை கண்டு நோன்பு நோருங்கள், பிறையினை கண்டு நோன்பைவிட்டுவிடுங்கள். மாதம் உங்களில் இருந்து மறைக்கப்பட்டிருக்குமானால் 30ஆகபூரணப்படுத்திக் கொள்ளுங்கள்." (முஸ்லிம்)

"நபி (ஸல்) அவர்கள் றமழான் மாதம் குறித்து குறிப்பிடுகையில், பிறையை காணும்வரை நீங்கள் நோன்பு நோற்காதீர்கள், அதனை காணும் வரை நீங்கள் நோன்பைவிட்டுவிடவும் செய்யாதீர்கள். மேக மூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்." (புஹாரி, அஹ்மத்)

புலக்கண்களால் காண்பது இஜ்மாஉ'வினால் தேவைப்படுத்தப்படுகின்றது

ஹனபி சட்டவியல் அறிஞரான அபூபக்ர் இப்னு அலி அர்-ராஸி அல் ஜஸ்ஸாஸ் அவர்கள் தனது நூலான 'அஹ்கம் அல் குர்ஆனில்' குறிப்பிடுகையில்:
"நபி (ஸல்) அவர்கள் குறித்துக் காட்டிய 'பிறையை பார்த்து நோன்பு நோருங்கள்' என்ற வாசகமானது அல் குர்ஆனின் நபியே! ஆவர்கள் உம்மிடம் வளர்ந்தும் தேய்ந்தும்பிறக்கும் பிறைகளைப் பற்றி கேட்கின்றனர். நீர் கூறும்; அவை மனிதர்களுக்ககாலங்களையும், ஹஜ்ஜையும் அறிவிக்க கூடியவை.'(2:189) முஸ்லிம்கள் றமழானில் நோன்பு நோற்க பிறையினை புலக்கண்களினால் பார்த்திருந்தல் வேண்டும்' என்ற நிபந்தனையினை இவ் அல்குர்ஆன் வசனத்தினதும், ஹதிஸ்கள் மூலமாயும் அறிந்து வைத்துள்ளனர். எனவே, மாதத்தினை அறிவிக்கும் படியாக கூறப்பட்ட புதிய பிறையினை புலக்கண்களால் காண்பதென்பது இதற்கு தக்க சான்றாகும்." (அஹ்கம் அல் குர்ஆன், பகுதி.1, பக்.279)
அவர் தனது உரையில், "றமழான் மாதத்தினை கணிக்க நபி (ஸல்) அவர்களினால் கற்றுத்தரப்பட்ட ஒரே முறை புலக்கண்களால் பிறையினை காண்பதாகும். மேக மூட்டம் போன்ற தகாத காலநிலைகள் காரணமாக இருப்பின் 29ம் நாளில் அது சாத்தியமல்ல. இதன்போது ஷஹ்பான் மாதத்தினை 30 ஆக புரணப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே அடிப்படை விதியாகும்" எனக் கூறுகின்றார்.

மேலும் கூறுகையில், "நபிகளாரின் வாசகங்களிலிருந்து, புதிய பிறை புலக்கண்களுக்கு அகப்படாத வரையில் அம்மாதம் 30 நாட்களை கொண்டதாகும் என்பதே அடிப்படை விதியாகும். மேக மூட்டம் காரணமாக பிறையினை காண முடியாத வேளை நாம் ஒவ்வொரு மாத்தினையும் 30 ஆக கணக்கிடுவது கட்டாயமாகும். இவ்விதியானது இஸ்லாமிய மாதங்கள் யாவுக்கும் உரியதாகும். புலக்கண்களால் பிறையினை காண்பது மாதத்தின் நாட்களை 30ல் இருந்துகுறைப்பதாக மாத்திரமே அமையும் ." (அஹ்கம் அல் குர்ஆன், பகுதி.1,பக்.280)

கணிப்பினடிப்டையிலான நம்பிக்கையானது ஷரிஆவிற்கு முறனானதாகும்

"றமழான் மாதத்தினை வரவேற்பதிலோ அல்லது அதற்கு பிரியாவிடை அளிப்பதிலோ வானியல் ரீதியிலான கணிப்பிடலினை ஏற்றுக்கொள்வது கிடையாது என்பதில் அனைத்து சட்டவியல் அறிஞர்களுக்கும் மத்தியில் கருத்துடன்பாடு காணப்படுகின்றது" என அல்-ஜஸ்ஸாஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார். (அஹ்கம் அல்குர்ஆன், பகுதி.1, பக்.280)

"இதனால், இவ்வானியல் கணிப்பீடானது ஷரிஆவிற்கு மாற்றமானதாகஇருப்பதனால் இஜ்திஹாதின் வரம்பெல்லைக்குள் வராது. ஏனெனில், அல்குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ், சட்டவியலாளர்களினுடைய கருத்தொற்றுமை (இஜ்மாஉ) என்பன அதற்கு முற்றிலும் எதிரானது." (அஹ்கம் அல் குர்ஆன், பகுதி.1, பக். 280) 

ஆல்-ஜஸ்ஸாஸ் அவர்களின் கருத்தில், "புலக்கண்களால் கண்டு மாதத்தினைஆரம்பிப்பதன் முக்கிய விடயப்பொருள் யாதெனில் வணக்க வழிபாடுகளை வெறும்சாத்தியப்பாடான நிகழ்வுகிளில் (probability) அன்றி அதனை ஒருநிச்சயத்தன்மைவாய்ந்த நிகழ்வில் (certainty) மேற்கொள்ளவேயாகும்." ( உம்தத்அல்- காரி, பகுதி.10, பக். 265) 

இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறையை கண்டு நோன்பைநோற்றுக்கொள்ளுங்கள். பிறையை கண்டு நோன்பை விட்டு விடுங்கள். மேகமூட்டமாக இருப்பின் 30ஆக பூர்த்தி செய்துகொள்ளுங்கள்." இங்கு நபி (ஸல்) அவர்கள் ஷஹ்பான் மாதத்தில் மேக மூட்டமாக இருந்தால் அதனை 30 ஆக கணக்கிட்டுக் கொள்ளும்படியாக எம்மை பணிப்பதுடன் ஷவ்வால் மாதத்தினை ஆரம்பிக்க முன்பதாக றமழான் மாதத்தின் 29ம் நாளில் மேக மூட்டமாக இருப்பின் அதனை 30 ஆக கணக்கிட்டுக்கொள்ளும்படியும் எம்மை பணிக்கின்றார்கள். இதன்மூலம் நாம் எமது வணக்கங்களை ஒரு நிச்சயத்தன்மையான சான்றின்மூலங்களுடன் ஆரம்பிக்க முடிவதுடன் அதனை அவ்வாறான சான்றின்உதவியுடன் பூரணப்படுத்திக்கொண்டு நிறைவு செய்யவும் முடிகின்றது. இதனாலேயே நபிகளார் (ஸல்) அவர்கள் பிறிதொரு அறிவிப்பில்; 'நீங்கள் பிறையைகாணும் வரை நோன்பு நோற்காதீர்கள், பிறையை காணும் வரை அதனைவிட்டுவிடவும் செய்யாதீர்கள்' எனக் கூறுகின்றார்கள். மேலும் அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கினறார்கள்; 'றமழான் மாதத்தினை தீர்மானிக்கஷஹ்பான் மாதத்தின் பிறையை கணக்கிடுங்கள்' (திர்மிதி)."               (உம்தாத்அல்-காரி, பகுதி.10, பக்.117)     

அல் ஜஸ்ஸாஸ் அவர்கள் நவீன சட்டவியல் அறிஞர்களுள் ஒருவராவார். ஹனபி, மாலிகி, ஷாபிஇ மற்றும் ஹன்பலி முதலிய சட்டப்பிரிவுகளின் கருத்துக்களிலும் வானியல் கணிப்பீடானது இஸ்லாமிய மாதத்தினை தீர்மானிப்பதில் அதிகராம் வாய்ந்த முறையல்ல என்பது தெளிவானதாகும். மாதங்கள் ஒன்றில் புலக்கண்களால் பிறையை காண்பதன் மூலமாகவோ அல்லது மாதத்தின் நாட்களை 30ஆக பூரணப்படுத்துவதன் மூலமாகவோதான்  உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இத்தகைய வாதக் கருத்துக்களில் மேற்போந்த அறிஞர்கள் எவ்வாறான கருத்தினை கொண்டுள்ளனர் என்பதனை தொடர்ந்து ஆராய்வோம்.

காதி அபூ அல்- வலீத் அவர்கள் கூறகின்றார்கள் கணிப்பீட்டின் அடிப்படையில்ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் வேளை ஒருவர் அதற்காக தயாராகி கொண்டிருப்பார் 
ஆஹ்மத் இப்னு முஹம்மத் அல்- ஹமாவி, மற்றொரு ஹனபி சட்டவியல் அறிஞர் பின்வருமாறு கூறுகின்றார்;
"எமக்கு நோன்பினை ஆரம்பிக்கவும், அதனை நிறைவுசெய்து கொள்ளவுமான நிபந்தனை பிறையினை புலக்கண்களினால் காண்பதாகும், மாறாக வானவியல் கணிப்பீடானது இங்கு பின்பற்றப்படுவது கிடையாது. ஷாபி சட்டவியல் பரிவினை சார்ந்த, அல்- தஹ்ஸிப் அவர்கிளின் கருத்திலும் றமழானை ஆரம்பிப்பதிலும், அதனை நிறைவுசெய்து கொள்வதிலும் வானவியல் கணிப்பீடானது நம்பகத்தன்மையற்றதாகும்." (உயூன் அல்- பஸாயிர், பகுதி.02, பக்.66)

முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்-ஹர்ஷி அவர்கள் மாலிகி சட்டவியல் பிரிவினது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகையில்;
"எந்தவொரு நபரும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டடிய முறைக்கு மாற்றமாக எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது. நபி அவர்கள் புலக்கண்களினால்பிறையை கண்ட சான்றுகளை மையமாக வைத்து அல்லது நாட்களை 30 ஆகபூர்திசெய்தே நோன்பினை நோற்றார்கள். வேறு எந்தவொரு முறையும் நபிஅவர்களினால் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. ஆகவே, வானியல் கணிப்பீடும் அதன் நம்பக தன்மை குறித்தும் பல்வேறு வாக்கு வாதங்கள் காணப்படினும் நாம் அவை குறித்து கவனம் எடுக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை."  (ஷரஹ் முஹ்தஸர் கலீல் லி-அல்-ஹர்ஷி, பகுதி.2, பக்.237)

மாலிகி சட்டவியல் பரிவின் மற்றொரு அறிஞரான முஹம்மத் இப்னு அஹ்மத் அத்-தஷுக்கி இதே கருத்தினை குறிப்பிடுகையில்;
இமாம் மாலிக் அவர்கள், "பிறையை காண்பதற்கு எந்தவொரு சாத்தியங்களும் நிலவாத வேளை அல்லது மேக மூட்டமாக இருப்பின் மாதங்களை 30 ஆக புரணப்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்ற கருத்தினையே கொண்டிருந்தார்கள் என்று கூறுகின்றார்." (அல்- பாஜி, அல்-முன்தகா ஷரஹ் அல்- முஅத்தஹ், பகுதி.2, பக்.38)
"ஒருவர் நோன்பினை வரவேற்க காத்திருக்கையில் மற்றெருவர் வானியல் கணிப்பீட்டின் அடிப்படையில் நோன்பினை நோற்றிருப்பார். ஆனால் புலக்கண்ணால்பார்த்தோ அல்லது 30ஆக பூரணப்படுத்தியோ அல்லஎன காதி அபுல்- வலித் அவர்கள் கூறகின்றார்கள். (அல்- பாஜி, பகுதி.2, பக்.38)

அந்- நபவி அவர்களின் கருத்தில் மக்கள் கணிப்பீட்டின் மூலமாக தேவைப்படுத்தப்படும் வேளை பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்
ஸஹீஹ் அத்-தீன் இப்னு அஹ்மத் அர்-ரம்லி, பிரபல்யம் வாய்ந்த ஷாபிஇ சட்டவியல் அறிஞர் குறிப்பிடுகையில்;
"நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கணிப்பீட்டில் தங்கியிருக்கவில்லை. ஆனால் அதனை அவர்களின் கூற்றான 'நாம் எழுதவோ கணிக்கவோ தெரியாத தேசம்' என்பது நிராகரிக்கின்றது. இப்னு தகீக் அல்- ஈத் அவர்கள் இந்த வானியல் கணக்கிடலானது நோன்பினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான மூலமொன்றாக கருதப்பட முடியாததுஎன கூறுகின்றார். (பத்வா, பகுதி.2,59) 

இதே கருத்தினை மேலே குறிப்பிட்ட ஹதீஸினை ஆதாரம் காட்டி இமாம் யஹ்யா இப்னு ஸரப் அந் நபாவி அவர்கள் தனது அல்-மஜ்மு நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில்;
"மக்கள் கணிப்பீட்டினை பின்பற்ற முயற்சிப்பார்களாக இருந்தால் அது அவர்களுக்கு சிரமத்தினை உண்டுபண்ணும். ஏனெனில் கணக்கிடலானது ஒரு நகரத்தில்வாழ்கின்ற அனைவருக்கும் விளங்கிக்கொள்ள முடியுமான தன்மையுடையதல்ல. பெரும்பான்மையினருடைய கருத்தே சரியானநிலைப்பாடாகும். எதுவாக இருப்பினும் நபி (ஸல்) அவர்களினுடைய உபதேசம்இதனை நிராகரிப்பதாக உள்ளதனை நாம் உற்று நோக்க வேண்டும்."     (பத்வா, பகுதி.6, பக்.276)

அஷ்-ஷுர்கானி அவர்களும் இதனையே குறிப்பிடுகின்றார்;
"30ஆக பூர்த்தி செய்வதனை கணிப்பிடலுக்கு ஆதாரமாக காட்டுவது உண்மையானஒரு விடயமல்ல. ஏனெனில் மக்கள் அதனை பின்பற்றுவார்களாக இருந்தால் பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். காரணம் அவர்களில் மிகச்சிலர் மாத்திரமே அது பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள். அத்தோடு மக்களில் அதிகமானோர் எதனை அறிந்து வைத்திருக்கின்றார்களோ அதனையேஷரிஆ சட்டம் மக்களை பின்பற்ற அனுமதிக்கும்." ( ஷரஹ்அஷ்-ஷுர்கானி 'அலா முவ்தா மாலிக், பக்.152)
"மேக மூட்டமானது மிகவும் அரிதாகவே அடிவானத்தில் காணப்படும். றமழானைஆரம்பிப்பதற்கான ஷரிஆவினது நியாயம் புலக்கண்களினால் பிறையினைகாண்பதாகும். அதிகமான சட்டவியல் அறிஞர்கள் வேறு ஏதேனும் வழிமுறைகளைஇதற்காக வலியுறுத்தியதோ அல்லது பரிந்துரை செய்ததோ கிடையாது. இதுவே இமாம் ஷாபிஇ, மாலிக்கி, அபூஹனிபா ஆகியோரினதும், ஏனைய கடந்தகால மற்றும் தற்கால அறிஞர்களில் பெரும்பான்மையானோரினதும் கருத்தாகும்." (அப்துர்ரஹீம் இப்னு அல்-ஹுஸைன் அல் ஈராக்கி, தர்ஹ் அத்-தத்ரிப், பகுதி.04, பக்.113-114) 

கணிப்பீடானது அதீத நம்பிக்கையடனும் வானியல் சாஷ்திரத்துடனும் தொடர்புபட்டது 
குறிப்பு: இங்கு மேலே குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்தினடிப்படையில், நபி(ஸல்) அவர்களினுடைய காலத்தில் வானியல் என்பதும் வானியல் சாஷ்திரம் என்பதும்வேறு வேறான பகுதியாக பிரித்தறியப்பட்டிருக்கவில்லை.
 
"கணிப்பீட்டினை அவ்வாறன சட்டவியல் அறிஞர்கள் புறத்தொதுக்க முக்கியமானகாரணம் வானியல் சாஷ்திரத்துடனும், அதீதத்துடனும் அதற்கு காணப்படுகின்றநெருக்கமான தொடர்பாகும். இவை முற்றாக நபி(ஸல்) அவர்களினால் தடுக்கப்பட்டதாகும். அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் நபி (ஸல்) அவர்களினுடைய கூற்றுக்களை காரணம் காட்டி கணிப்பீட்டின் பிரயோகத்தினை கடுமையாக தடைசெய்கின்றார்கள். அதாவது; 'அதீத நம்பிக்கையின் விளைவாகஒருவர் வானியல் சாஷ்திரம் பற்றி எதனை கற்றுக்கொண்டாரோ அதனை தவிர, வேறு அதன் எந்தவொரு பகுதியையும் கற்றுக்கொள்ள வேண்டாம்.' உமர் (றழி) இவர்கள் கூறுகையில்; 'வானியல் சாஷ்திரத்தில் எவை உங்களுக்கு தரைவழியாகவும், கடல் வழியாகவும் வழிகாட்டவல்லதாக காணப்படுகின்றதோ அவைகளை கற்றுக்கொள்ளுங்கள் அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.' இதனால் திசையை அறிய உதவும் குறியீடுகளையும், சான்றுகளையும் தவிர ஏனைய வானியல் சாஷ்திர பகுதிகள் இப்னு ஹஜர் அவர்களின் கருத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும்." (அத்-தல்கிஸ், பகுதி.02, பக்.360)

இமாம் இப்னு தைய்மிய்யா அவர்களும் இதனை எதிர்ப்பதில் மிகவும் காரமாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அவர் கணிப்பிடலின் மூலமாகமாதத்தினை ஆரம்பிப்பதனையோ அல்லது அதனை முடிவறித்திக்கொள்வதனையோ ஆதரிக்கவில்லை. இவரின் ஆழமான ஆய்வில், பிறையினை காண்பது தொடர்பில்நிச்சயதன்மையான ஒரு முறையாக கணிப்பீடு காணப்படுகின்றது என்பதனை அவர்ஏற்றுக்கொள்ளவில்லை. இவரும் அல்-ஈராக்கி மற்றும் அல்-ஜஸ்ஸாஸ் முதலியோரின் கருத்துக்களுக்கு ஒப்பவே கருத்தினை ஒப்பளிக்கின்றார்.  

வர் மேலும் குறிப்பிடுகையில்;
"ஷரிஆ அறிஞர்களில் பிரதானமானவர்கள் கணிப்பீட்டின் வாயிலாக புதிய பிறையை தீர்மானிப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். வானியல்சாஷ்திரத்தின் அறிவு கூட கணிப்பிடலின் வாயிலாக புதிய பிறையினைஅதிகாரபூர்வமாக தீர்மானத்துக்கொள்ள முடியாது என ஏற்றுக்கொள்கின்றனர். இதனாலேயே, வானியல் சாஷ்திரத்தில் புலமைபெற்றவர்கள் கூட கணிப்பிடலை ஏற்பதனைவிடுத்தும் புறந்தள்ளுகின்றனர். இவை பற்றிய முழுமையான அறிவில்லாதவர்களும், அதனை பரம்பரையாக கற்றுத்தேறாதவர்களுமே தங்களுக்குள் அதனை வலியுறுத்திக்கொள்கின்றனர். இவ்வழிமுறையானது அடிப்படையில் அல்லாஹ்வின் வழிகாட்டலை மக்கள்மத்தியில் தடம்புறழச் செய்வதுடன் யூதர்களின் வழிகளை பின்பற்றவும்வழியமைத்து விடுகின்றது எனலாம்." (தகீக் அத்-தீன், அல் பதாவா அல் குப்றா, பகுதி.06, பக்.590)

இங்கு இப்னு தைமிய்யா அவர்கள் யூத ரெப்பினிக்கல் சயினால் அவர்களின் சந்திர மாதத்தினை ஆரம்பிப்பதற்காக கணிப்பிடலை அதிகாரபூர்வமாக அறிவித்தனை மேற்கோள் காட்டுவதனை நாம் அவதானிக்கலாம்.

மேலும், அவர்கள் தமது எதிர்ப்பு வெளிப்பாட்டினை கீழ் குறிப்பிடப்படுகின்ற பலமான வார்த்தைகளினால் பதிவு செய்கையில்;
"கணிப்பிடலானது ஹதீஸ்களில் குறிப்பிடப்படுவது போன்று சந்தேகமற நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாலும் அதே போன்று அவர்களுடைய தோழர்களினாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. .....ஆதலால் எவர் கணிப்பிடலினை தெடர்ந்தும் வலியுறுத்துகின்றாரோ அவர் தவறாக வழி நடாத்தப்பட்ட கண்டுபிடிப்பாளர் என்பதுடன் அவர் ஷரிஆ விடயத்தில் மட்டுமல்லாது வானியல் சாஷ்திரத்தின் தத்துவார்த்ததிலும் தவறை விடுகின்றார்." (தகீக் அத்-தீன், அல்பதாவா அல் குப்றா, பகுதி.25,பக். 207) 

 
இன்ஸா அல்லாஹ் தொடரும்…..

 

Browse