மத்ஹபு சட்டங்கள் - அசிங்கத்தின் மொத்த உருவம்!

Tuesday
1. கசையடிக்கு விசித்திரமான விளக்கம்

ஐம்பது குச்சிகளை ஒன்றாக இணைத்துக் கட்ட வேண்டும். ஐம்பது குச்சிகளும் அவனது மேனியில் படுமாறு இரண்டு தடவை குத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நூறு கசையடி அடித்ததாக ஆகிவிடும்.



2. அடுத்தவன் குழந்தை

ஒருவன் நான்கு ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கர்ப்பமுற்றால் அந்தக் குழந்தை அவனையே சேரும். (மஙானி பக்கம் 507)



3. இமாமின் தகுதிகள்:

அழகிய மனைவியை உடையவராக இமாம் இருக்க வேண்டும்

அவரது தலை பெரியதாகவும், உறுப்பு சிறியதாகவும் இருக்க வேண்டும். (துர்ருல் முக்தார்)



4. இந்தியாவில் ஜும்ஆ

மன்னரோ, மன்னரின் உத்தரவு பெற்றவரோ தவிர மற்றவர்கள் ஜும்ஆவை நடத்துவது செல்லாது. ஹனபி மத்ஹபின் சட்டநூலான ஹிதாயா, முதல் பாகம், பக்கம் 168.

பெரு நகரங்களில் தவிர மற்ற பகுதிகளில் ஜும்ஆ செல்லாது. எந்த ஊரில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றும் அமீரும், நீதிபதியும் உள்ளாரோ அதுவே பெருநகரமாகும்.

(அதே நூல், அதே பாகம், அதே பக்கம்)



5. ஊரை அடித்து உலையில் போடலாம்

பொது வழியை விற்பதும், அன்பளிப்பாக வழங்குவதும் செல்லும்.

(ஹிதாயா பாகம் 2, பக்கம் 4)

ஒரு மனிதன் தனக்கு உரிமையானதைத்தான் விற்க முடியும் உரிமையில்லாத எதனையும் எவரும் விற்க முடியாது, அறிவுடைய எந்த மனிதரும் இதை ஏற்கமட்டார். ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூல் விற்கலாம் எனக் கூறுகிறது.



6. விசித்திரமான ஆராய்ச்சி

ஹனபி மத்ஹபின் இமாம்களில் மூன்றாவது இடத்தை வகிக்கும் முஹம்மத் இமாமுடைய கருத்துப்படி யானை, பன்றியைப் போல் முழு நஜீஸாகும். இந்த விசித்திரமான சட்டம் ஹிதாயா பாகம் 2, பக்கம் 39ல் காணப்படுகிறது.



7. விற்கக் கூடாதவைகளை பிறர் மூலம் விற்கலாம்

ஒரு முஸ்லி ம் சாராயத்தை வாங்குமாறு அல்லது விற்குமாறு கிறித்தவருக்குக் கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார். இது அபூஹனீபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும்.

(ஹிதாயா பாகம் 2, பக்கம் 41)



8. கற்பனைக் கதைகள்

அபூஹனீபா இஷாவுக்கு செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுதார். இவ்வாறு நாற்பது வருடங்கள் (அதாவது 15 ஆயிரம் நாட்கள்) தொழுதிருக்கின்றார். ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார். தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்.

(துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 38)

அபூஹனீபா அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் போது ஒரு இரவு கஅபாவின் காவலாளியிடம் கஅபாவிற்குள் நுழைய அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுத்தார். உள்ளே நுழைந்து இரண்டு தூண்களுக்கிடையில் இடது காலை வலது கால் மீது வைத்துக் கொண்டு வலது காலில் நின்றார். இப்படியே பாதி குர்ஆனை ஓதி முடித்தார். பின்னர் ருகூவு செய்து ஸஜ்தா செய்தார். பின்னர் வலது காலை இடது காலின் மீது வைத்துக் கொண்டு இடது காலில் நின்றார். மீதி இருந்த பாதி குர்ஆனையும் ஓதி முடித்தார். ஸலாம் கொடுத்ததும் தம் இறைவனிடம் பின்வருமாறு உரையாடினார்.

என் இறைவா! உனது பலவீனமான இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. ஆயினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளான். எனவே எனது முழுமையான அறிவின் காரணமாக என் பணியில் ஏற்படும் குறைகளைப் பொறுத்துக் கொள் என்று அபூஹனீபா கூறினார்.

உடனே கஅபாவின் மூலையி ருந்து, 'அபூஹனீபாவே! நம்மை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டீர். அழகிய முறையில் பணியும் செய்து விட்டீர். எனவே உம்மையும் கியாம நாள் வரை உம்மைப் பின்பற்றுவோரையும் நான் மன்னித்து விட்டேன்' என்று ஓர் அசரீரி கேட்டது.

(துர்ருல் முக்தார்இ பாகம் 1, பக்கம் 39)



9. ஆபாசக் களஞ்சியம்

மிருகத்துடன் அல்லது செத்த பிணத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை. (துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 23

ஒருவன் தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தால், விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பு கடமையில்லை. ( துர்ருல் முக்தார் பாகம் 1இ பக்கம் 150)



10. கோமாளிக் கூத்து

ஒருவர் உளூச் செய்யும்போது ஏதோ ஓர் உறுப்பைக் கழுவவில்லை. எந்த உறுப்பு என்று தெரியவில்லை. அப்படியானால் (இடது காலாகத் தான் அது இதுக்க வேண்டும். எனவே) இடது காலைக் கழுவ வேண்டும். ஏனெனில் அதுதான் கடைசிச் செயல்.

(துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 51)



11. செத்த பிணத்தில் சூப் போட்டு குடிக்கலாமாம்

தாமாகச் செத்தவை ஹராம் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. அவை முழுமையாக ஹராம் என்பதில் சந்தேகமில்லை. தோலை மாத்திரம் பாடம் செய்து பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளனர். ஆனால் மத்ஹபு என்ன கூறுகின்றது?

செத்த பிராணிகளின் முடியும் அதன் எலும்பும் தூய்மையானவை.

ஹனபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா பாகம் 1, பக்கம் 41.

செத்த ஆட்டின் எலும்பை சூப் போட்டு குடிக்கச் சொல்கிறார்களா?

12. சிறுநீர் வைத்தியம்

ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் அல்ஹம்து அத்தியாயத்தை சிறுநீரினாலும் இரத்தத்தினாலும் நிவாரணம் நாடி நெற்றியிலும் மூக்கிலும் எழுதலாம். அதில் நிவாரணம் இருப்பதாக அறியப்பட்டால் இவ்வாறு செய்யலாம். ஆயினும் அவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று தகவல் இல்லை. (துர்ருல் முக்தார் , பாகம் 1, பக்கம் 154)

தாகமாக இருப்பவர் மதுபானம் அருந்த அனுமதிக்கப் படுவது போல் வறுமை நேரத்தில் செத்த பிணத்தைச் சாப்பிட அனுமதிக்கப் படுவது போல் இதற்கும் அனுமதியளிக்கப் படும். இதுதான் பத்வா! (அதே நூல்இ அதே பக்கம்)



13. தொழுகையா? விளையாட்டா?

நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன் என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகிறது. அவர் அதே நிய்யத்தில் (நோக்கத்தில்) தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்றே கூற வேண்டும். ஆனால் தங்கக் காசை அவருக்குக் கொடுக்க வேண்டியதில்லை.

(துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 223)



14. தொழுகையில் பைபிள் ஓதலாமாம்!

தொழுகையில் பாரசீக மொழியில் ஓதினால் அல்லது தவ்ராத், இஞ்சீலை (பைபிளை) ஓதினால் அது கதைப் பகுதியாக இருந்தால் தொழுகை பாழாகிவிடும். போதனைகளாக இருந்தால் தொழுகை பாழாகாது.

(துர்ருல் முக்தர், பாகம் 1, பக்கம் 359)



15. குழந்தைகளைத் திருடலாம்.

நகைகள் அணிந்துள்ள குழந்தையை (நகையுடன்) யாரேனும் திருடிச் சென்றால் அவனது கைகளைத் துண்டிக்கக் கூடாது.

(ஹிதாயா பாகம் 1, பக்கம் 540)



16. இப்படியும் திருடலாம்

ஒருவன் மற்றவரின் வீட்டில் துவாரமிட்டு அதன் வழியாக எதையேனும் எடுத்தால் அவனது கையைத் துண்டிக்கக் கூடாது.

(ஹிதாயா பாகம் 1, பக்கம் 546)



17. விபச்சாரத்தை அனுமதிக்கும் மத்ஹபு

விபச்சாரம் செய்வதற்காக ஒரு பெண்ணை வாடகைக்குப் பேசி அவளுடன் விபச்சாரம் செய்தால் அபூஹனீபாவின் கருத்துப்படி அவனுக்குத் தண்டனை இல்லை.

(கன்ஸுத்தகாயிக், பாகம்1, பக்.184)

காசு கொடுக்காமல் ஓசியாக விபச்சாரம் செய்வது தான் கூடாது. காசு கொடுத்து விட்டால் அதற்குத் தண்டனை இல்லை



இன்னும் ஏராளம் ஏராளம்….

திட்டமிட்டால் வெற்றி உறுதி

Thursday
ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். 'திட்டமிடல்' என்பதுதான் அந்த அரண்!

'வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர்களாகவே இருப்பார்கள்'.

இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம்இ இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை: 'உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்' என்ற கருத்தில்’ என்ன வேறுபாடு சொல்லமுடியும்? ஆனால்இ இந்தச் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் சொல்லில் வராத செய்தி ஒன்று புதைந்திருக்கிறது! என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்?


செக்கு மாட்டிற்கும் வண்டி மாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையைக் கேட்டால் எதைச் சொல்வீர்கள்? இரண்டு மாடுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன; இது ஒற்றுமை. என்ன நடந்தாலும் செக்கு மாடு இருக்கும் இடத்தை விட்டு ஓர் அடிகூட முன்னேறுவதில்லை: ஆனால் வண்டிமாடு கிளம்பின இடமும் போய்ச் சேரும் இடமும் வெவ்வேறு. இது வேற்றுமை.


நடந்துகொண்டே இருப்பதாலேயே முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்பது பொருளில்லை. உடற்பயிற்சிக் கூடங்களிலும், உடல் தகுதி காணும் சில மருத்துவமனைகளிலும், ஒரு நடைக்கருவி வைத்திருப்பதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சிலர் அதில் நடப்பார்கள். சிலர் வேகமாக மூச்சிரைக்க, வேர்வை வழிய ஓடுவார்கள். ஆனால் ஓர் அங்குலம்கூட முன்னே செல்ல மாட்டார்கள்.

இது உடற்பயிற்சிக்குப் பொருந்தும். வாழ்க்கைக்குப் பொருந்துமா? நடப்பதன் நோக்கமே ஓர் இடம் விட்டு வேறு இடம் போக வேண்டும் என்பதுதானே? 'இங்கிருந்து கிளம்புகிறேன்; இந்த இடத்தை அடைவேன்' என்ற தெளிவுடன் நடப்பவனே குறித்த இடத்தை விரைவில் அடைகிறான். தெருத் தெருவாக நடந்து கொண்டே இருந்தால் பயன் உண்டா? 'பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது' என்றார் கண்ணதாசன்.

இது உழைப்புக்கும் பொருந்தும். ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். 'திட்டமிடல்' என்பதுதான் அந்த அரண்!

உழைப்பின்றி 'இப்படிச் செய்ய வேண்டும்: அப்படிச் செய்யவேண்டும் என்பவர்களை 'வாய்ச்சவடால்' பேர்வழி என்கிறோம். 'ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டியதைப்போல' என்ற பழமொழியும் இவர்களைக் குறிக்கிறது. உழைப் பில்லாத திட்டமிடல் வெறும் வீண் பேச்சுதான். ஆனால் திட்டமிடாத உழைப்பு...?

'விழலுக்கு இறைத்த நீர்' என்ற பழமொழி இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. நீர் இறைப்பது என்பது கடினமான உழைப்புதான். ஆனால்இ இறைக்கும் நீர் எங்கே போய்ச் சேர வேண்டுமோ அதை நோக்கிப் பாய வேண்டும். இல்லா விட்டால் நீரை இறைத்துத்தான் என்ன பயன்?

திட்டமிடுதலும், செயல் படுதலும் இணைந்தால்தான் வெற்றியின் வாசல் தென்படுகிறது. நாட்டின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதற்கு ஆணையம் வைத்திருக்கிறது அரசு. திட்டமிடல் என்பதுதான் வேர். செயல்படல் என்பது கிளைபரப்பி தளிர் விட்டு மலர் தருவது! வேரின்றி அமையாது மரம்!

ஓர் இராணுவத்திற்கு வெற்றி எதிரிகளைத் தாக்குதலால் மட்டும் வருவதில்லை: தாக்குதல் நடத்தப் போகும் நேரத்தையும், முறைகளையும், வேகத்தையும் திட்டமிட்டுக் கொண்டு களத்தில் இறங்கினால்தான் வெற்றி சாத்தியமாகிறது. தேர்வுக்குப் படிக்கும் மாணவன் தொடங்கி, பெரும் நிறுவனம் நடத்தும் முதலாளி வரை திட்டமிட்டு செயல்படுபவரே வெற்றி பெறுகிறார்கள்.


ஒருமுறை தோற்றவர், மறுமுறை வெல்வதற்கான முதற்காரணம் எப்போதும் திட்டமிடுதலாகவே இருக்கிறது. இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தை முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் ஹிலாரி என்னும் செய்தி எல்லோருக்கும் தெரியும்: ஆனால், பலருக்குத் தெரியாத செய்தி ஒன்றுண்டு. அவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடவில்லை என்பதே அது.

மலையேற முடியாமல் திரும்பிய போதுஇ எட்மண்ட் ஹிலாரி சொன்ன சொற்கள் மிக உயர்ந்தவை. எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி அவர் சொன்னார்: 'உன்னை நான் கண்டிப்பாக வெல்வேன்; உன் சிகரத்தில் நான் கால் பதிப்பது உறுதி. காரணம், உனக்கு இதற்கு மேல் வளர்ச்சியில்லை. அது நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், நான் இன்னும் முயல்வேன், வளர்வேன்.'

மலையேறுதல் என்னும் அவரது செயலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடுமையான பயிற்சி உட்பட அனைத்தும் திட்டமிட்டு செயல்பட்டபோது அந்த செயலுக்குரிய பலன் எட்மண்ட் ஹிலாரிக்கு கிடைத்து விட்டது.


உலகத்தையே வெல்வதற்கு வழி சொல்லவில்லையா நம் வள்ளுவன்?

'ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்

கருதி இடத்தால் செயின்.'

செயல்பட வேண்டிய காலத்தையும், செயல்பட வேண்டிய இடத்தையும் திட்டமிட்டுக் கொண்டு செயல்படுபவர்கள் எதைப் பெற விரும்புகிறார்களோ அதைப் பெற்றுவிடுகிறார்கள்!


'திட்டமிடல்' என்பதும் வறட்டுத்தனமாக இருந்து பயனில்லை. அறிவினாலும், அனுபவத்தினாலும் தீட்டப்பட்டதாக அது இருக்க வேண்டும். வள்ளுவனே அதற்கும் வழிகாட்டி விடுகிறான்.


' வினைவலியும்இ தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.'


செய்ய விரும்பும் செயலின் தன்மையையும் அதைச் செய்து முடிக்கத்தேவையான ஆற்றலையும் முதலில் அறிந்து கொள்ளல்; செயலை செய்து முடிப்பதற்கான ஆற்றல் தன்னிடம் ஏற்கனவே உள்ளதா- இல்லை, இன்னும் பெருக்கிக்கொள்ள வேண்டுமா என்பதை உணர்ந்து கொள்ளல்.


செயலை நாம் செய்து முடிக்க நமக்குச் சவாலாக இருப்பவர் எவர் என்றும் அவரது ஆற்றலின் அளவு என்ன என்றும் தெரிந்து கொள்ளல்; அவருக்குத் துணையாக எவரேனும் வருவரா என்பதையும் வருபவரின் ஆற்றல் என்ன என்பதையும் ஆய்ந்து கொள்ளல்; நமக்குத் துணையாக செயல்பட எவரேனும் உள்ளனரா என்பதையும் அவரின் ஆற்றலையும் புரிந்து கொள்ளல்!


எச்செயலை செய்வதற்கும் திட்டமிடல் என்பது அளவுக்கு கூர்மைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதை விளக்கவே வள்ளுவன் இவ்வாறு அடுக்கிக்கொண்டு செல்கிறான்.


'ஒரு மரத்தை வெட்டுவதற்கு 45 மணித் துளிகள் நேரம் தந்தால், அதில் முதல் 40 மணித் துளிகளை ஆயுதத்தைக் கூர்மைப்படுத்தவே செலவிட வேண்டும்' என்ற முதுமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?

'30 நிமிட மேடைப்பேச்சை 5 நிமிடங்களில் நான் தயாரித்து விடுவேன். ஆனால் 5 நிமிட மேடைப்பேச்சினை தயாரிக்க எனக்கு 30 நிமிடங்கள் வேண்டும்' என்றார் மிகச் சிறந்த பேச்சாளரான சர்ச்சில்.

மிகச்சரியாகவும் கூர்மையாகவும் திட்டமிடுதலே சிக்கல்கள் வராமல் தடுக்கின்றன; எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட சிக்கல்களிலிருந்து தப்பிக்கவும் வைக்கின்றன.


'வாழ்க்கை ஒரு மிக மோசமான ஆசிரியர்' என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாடம் நடத்தி, தேர்வு வைத்து அதில் தேர்ச்சியடைய வில்லை என்றால், ஆசிரியர் தண்டனை தருவார். வாழ்க்கையோ முதலில் தேர்வு நடத்தி, தண்டனை வழங்கிவிட்டு அதிலிருந்து ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது.

திட்டமிட்டு படிக்காத மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை தருகிறார். திட்டமிட்டு செயல்படாதவனுக்கு வாழ்க்கையே தண்டனை யாகி விடுகிறது.


'வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா? என்ற தலைப்பில் பட்டி மன்றங்கள்கூட நடத்தப்படுகின்றன. விடை மிக எளிதானது. வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.

மலர்ப் பாதையாக வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அது சலிப்பினைத் தந்துவிடும்.

அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.

ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே சிறந்த மாலுமியாக வளர்ச்சி யடைகிறான். திட்டமிட்டு செயல்படுபவனே வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்.

திட்டமிடுவது என்பது மிகப்பெரிய வேலை என்றும், நம்மால் அது முடியாது என்றும் எண்ணத் தேவையில்லை. எல்லோருக்குமே திட்டமிடல் என்பது ஓரளவுக்கு இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது.

காலையில் உடற்பயிற்சிக்கோ அல்லது நடைப்பயிற்சிக்கோ நாம் அணியும் உடை வேறு. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அணியும் உடை வேறு. ஒரு நேர்காணலுக்கோ, கல்லூரிக்கோ அல்லது அலுவல் தொடர்பாகவோ வெளியே செல்லும்போது அணியும் உடை வேறு. மறந்தும் கூட ஓரிடத்து உடையைப் பிற இடத்துக்கு நாம் அணிவதில்லை. பழக்கத்தில் நமக்குள் குடியேறி விட்ட ஒரு சிறு அளவிலான திட்டமிடல்தான் அது.


நம்முடைய ஒவ்வொரு சொல்லும் அதை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.

சற்று முனைப்பு இருந்தால் இந்த பழக்கம் எளிதில் கைகூடும். வெற்றி இலக்கும் எளிதாகும்.

'தன்மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அனந்தாள்' என்று கைகேயியைக் கம்பன் குறிப்பதுபோலஇ திட்டமிட்டே கெடுதல் செய்பவர்கள் உண்டென்றால்இ நம்மால் திட்டமிட்டு நற்செயல்கள் செய்யமுடியாதா என்ன?

வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.

மிஸ் கோல்

Wednesday
பாதையில் ஊரும் பாம்பை பிடித்து தனது பைக்குள் போட்டுக் கொண்டது போல் தான் மொபைல் போன்களை நாம் எமது சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைகின்றோம்.


ஒரு சிறிய மிஸ் கோல் என்றால் உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அதை பார்த்துவிட்டுத் தான் அல்லது விடையளித்துவிட்டுத்தான் அடுத்த விடயத்திற்கு எங்களை திசைதிருப்புகின்றோம்.


எமது கையிலிருக்கும் அந்த மொபையில் எந்தளவு எமக்கு பயனளிக்கின்றது என்று எம்மால் உறுதிப்படுத்துகின்றோமா என்றால் சத்தியமாக இல்லை.


சிலருக்கு எந்த வருமானமும் இருக்காது, ஆனால் பல கோல்கள் வந்துகொண்டே இருக்கும், பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவளித்து அதை வாங்கி பாவிக்கின்றோம்.


நாம் கடுமையான வேலையில் சிக்கி கடும் கஸ்டத்தில் வந்து தூங்குவோம், நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது சிறிதாக ஒரு மிஸ் கோல் வந்துவிட்டால் ஏதோ தூக்கத்தில் பாம்பு கடித்துவிட்டது போல் அல்லது சுனாமி வந்தது போல் அசிர்ச்சியுற்று எழும்புகின்றோம், உடனே பதிலளிக்க முடிகின்றோம்.


அப்படியென்றால் எமது வீட்டுக்கு பக்கத்திலிருக்கும், எம்மை படைத்த, எமக்கு உணவளிக்கின்ற, எமக்கு நல்ல தூக்கத்தை தந்த அந்த அல்லாஹ்வின் வீட்டிலிருந்து அழைப்பு வருகின்றது அந்த அதிகாலை “சுபஹ்” வேளை, ஆனால் நாம் அயர்ந்து, ஆழ்ந்து தூங்குகின்றோம்.


ஒரு மிஸ் கோல் (Missed called)க்கு ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழும்புகின்றோம்


ஆனால் பெறிய சத்தத்தில் அழைப்பு கேற்கின்றது, “வெற்றியின் பக்கம் வாருங்கள்” என அழைக்கப்படுகின்றது ஆனால் நாம் செவிடர்கலாக தூங்குகின்றோம்.


وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ [البقرة : )]


"பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்"


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ [البقرة : 153)]


"நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்”.

நன்றி: றுஸ்தா மஹ்ரூப் 
 

Browse