இப்படிக்கு.......

Wednesday
-றுஸ்தா மஹ்ரூப் 

ஏன் எனக்கு  இவ்வளவு மதிப்பு...
எதற்காக எனக்கு இவ்வள‌வு மவுசு.......

எனக்கு எல்லை உண்டு என்கிறார் சிலர்இ
எனக்கு மரணம் தான் எல்லை என்கிறார் பலர்இ
அப்படியானால் எனக்கு எல்லை தான் என்ன?

மாற்றம் காண எத்தனிக்கும் பலர்இ
மாற்றம் ஏமாற்ற‌மானால்இ
என்னில் பலன் என்னஇவாழ்வின் பொருளென்ன‌
என்று எனை புழம்பி தீர்கின்ரனர்.
அதுகிடக்கஇ
மாற்ற‌ம் ஏற்றமானால்இ
நான் தான் திருவினைஇவாழ்வின் பெரு துணை
என எனக்கு பூச்சூட்டுகின்றனர்........

அது சரி எனக்கு ஒரு சந்தேகம்......
மானிட சமூகம் எதற்காக போராடுகின்றது?
நிலையான வாழ்க்கைக்காக‌வா?
நிலையற்ற வாழ்க்கைக்காகவா?

நிலையற்ற வழ்க்கையின்இ
அற்ப சந்தோஷத்திற்காக போராடும் சமூகம்இ
நிலையான வாழ்வின் வெற்றிக்காக
எந்தளவு போராடுகின்ரது?

சிந்தித்தால் சிரிப்புத்தான் வருகிறதுஇ
எனக்குஇ மனித உள்ளத்தை எண்ணத்தை
நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.
மனிதன் தனது உள்ளத்தில்
ஒரு வரைபடம் வரைந்துஇ
அதை நிஜமாக்கஇ
என்னுடன் வாழ்வின் எல்லை வரை பயணிக்கின்றான்.
அப்படியல்லஇ

அவன் கனவிற்குஇ நான் தனியே பயனற்றவன்
என்னிலும் உயர்ந்த ஒரு சக்தியுண்டு
அதுவே இறைசக்திஇ
அதுவின்றி நான் கதியற்றவன்இ
என்பதை மறக்கின்றார் பலர்
சிலர் எல்லாம் விதிப்படி..
என என்னை விட்டும் விடுகின்றனர் இ
 அப்படியும் அல்ல‌

உண்மை எதுவெனில்இ
இறை வடித்த விதியுண்டு...
இறை அளித்த ம‌தியுண்டு..
இரண்டிற்கும் நடுவே நானுள்ளேன்.

என்னை கைக்கொள்ளும்
அனைவரிடமும் நான் வேண்டி நிற்பது
ஒன்றே ஒன்றுதான்.....
வாழ்வில் என்னை காரணம் காட்டி
வாழ்வினை சூனியமாக்காமல்இ
வாழ்வில் என்னை கருவாக்கி
வாழ்வினை சுபீட்சமாக்குங்கள்.

இப்படிக்கு
நான்
முயற்சி.
 

Browse