பிறையும் பிளவும்

Saturday

சந்திரமாத கணிப்பும் : சட்டவியற் கருத்துக்களும்
வழமையாக றமழான் மாதம் வந்துவிட்டால் பிறை தொடர்பான சர்ச்சையும் சூடுபிடித்துவிடுவது இன்று எமது சமூகத்தில் வழமையாகிவிட்ட விடயம். ஆனால் இந்த சர்ச்சை அந்த றமழானோடு முற்றுப்பெற்றுவிடுவதும் பின்பு அடுத்த றமழானுக்காக அல்லது துல்ஹஜ் மாதத்திற்கு ஆற விட்டுவிடுவதும் பழகிய ஒன்றாகிவிட்டது. ஆரம்பத்தில் சர்வதேச பிறை, உள்ளுர் பிறை, நாட்டுக்கொரு பிறை, ஊருக்கொரு பிறை என்றெல்லாம் பிரிந்து கிடந்த எமது கருத்துக்கள் இன்று புளிச்சுப்போய் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது. என்றாலும் ஆங்காங்கு புளிக்காத சோறு இருக்கத்தான் செய்கின்றது. என்றாலும், இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளவென மாதத்தினை ஆரம்பிப்பதானது அதிலும் குறிப்பாக றமழானை அல்லது துல்ஹஜ் மாதத்தினை ஆரம்பிப்பது சந்திரனை வெற்றுக்ணகளால் (புலக்கண்களால் அல்லது நிதர்சனமாக) காண்பதன் ஊடாகவா? அல்லது வானியல் கணக்கின் வாயிலாகவா? என்ற சோறு இன்னும் பலருக்கு ருசியாகத்தான் தென்படுகின்றது. இத்தகைய கருத்துக்களுக்கு வாதப்பிரதிவாதங்களை முன்வைப்பவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களால் மிகவும் மதிப்பளிக்கப்படுகின்ற இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்களின் கருத்துக்களை கருத்திற்கொள்வது கிடையாது. சிலவேளை அவர்கள் அதனை கருத்திற்கொள்ள மறுக்கின்றார்களா? அல்லது கண்டும் காணாமலும் விட்டு விடுகின்றார்களா? என்ற ஐயமும் எனக்கு பலமுறை தோன்றியிருக்கின்றது. ஏனைய வணக்கவழிபாடுகளின் சிறு சிறு நுட்பமான விடயங்களுக்கு கூட இத்தகைய அறிஞர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கின்ற இவர்கள், அதனை பின்பற்றுவதன் உள்ளார்ந்த குணாம்சங்களை வெளிப்படுத்தியும் வலியுறித்தியும் வருகின்ற இவர்கள், சமூக ஒற்றுமையை கட்டாயம் வலியுறுத்தியேயாக வேண்டிய தருணங்களில் அவர்களின் சட்ட கருத்துக்களை ஓரங்கட்ட முற்படுவதும் தமது சுயகருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் என்போன்ற மாணவர்களுக்கு சங்கட நிலையினை உண்டுபண்ணுகின்றது. புலக்ண்களால் பிறையினை காண்பது மற்றும் வானியல் கணக்கின் ஊடாக பிறையின் வயதினை கணித்தல் என்பது உண்மையில் ஒரு பதிய வாதப் பொருளல்ல. இங்கு ஆராயப்பட இருக்கின்ற இருபக்க சான்றுகளும் அதற்கு பெரும் சான்றாகும்.

-              பெரும்பான்மையினரின் வாதம்
-              பெரும்பான்மையனரது வாதத்தின் கருப்பொருள்
-              'ஷஹித' என்ற சொல்லின் மீதான பொருளாய்வு.

கடந்த காலங்களில் இஸ்லாமிய சட்ட ஆய்வில் ஈடுபட்ட அனைத்து பிரிவினருடையதுமான  ஏகோபித்த தீர்மானம் யாதெனில் றமழான் மாதமானது கணிப்பிடலின் மூலமாக தீர்மானிக்கப்பட முடியாதது என்பதாகும். பொரும்பான்மை சட்ட ஆய்வாளர்கள் நோக்கில் வானியல் கணிப்பீடானது இயற்கைக்கு முறனானது என கருதப்படுகின்றது. இதனால், வணக்கங்களில் ஒன்றான றமழானினை ஆரம்பிப்பதென்பதும் அதனை நிறைவு செய்வதென்பதும் நிச்சயமற்ற ஊகங்களிலும், சாத்தியப்பாடுகிளிலும் நின்று மேற்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. யதார்த்தத்தில், இஸ்லாமிய வணக்க வழிபாடுகளுடன் தொடர்புறக் காணப்படுகின்ற றமழான், ஷவ்வால் மற்றும் ஹஜ் முதலிய மாதங்கள் ஒன்றில் புலக்கண்களால் அவதானிப்பதன் ஊடாக அல்லது நாட்களை 30 ஆக பூர்த்தி செய்வதன் ஊடாக மாத்திரமே தீர்மானிக்க முடியும்.

பெரும்பான்மையினரின் வாதம்

அல் குர்ஆன் கூறுகின்றது,
'றமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான், மனிதர்களுக்குவழிகாட்டடியாகவும், நேரான வழியை தெளிவாக்க கூடியதாகவும், நன்மைதீமையை பிரித்தறிவிக்க கூடியதாகவும் உள்ள அல் குர்ஆன் அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தினை அடைகிறானோ அவன், அதில் நோன்புநோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும்நோயாளிகளாகவோ....'(2:185)

இவ்சனத்தில் காணப்படுகின்ற 'fபமன் ஷஹித மின்கும் அஷ்'ஷஹ்ரா' (உங்களில்எவர் அம்மாத்தினை அடைகின்றாரோ) எனும் சொற்றொடரினை பெரும்பான்மை சட்ட அறிஞர்கள் விளக்குகையில் புலக்கண்களினால் பிறையினை காண்பதனை தேவைப்படுத்துகின்றனர். இவ்வாறன அவர்களுடைய பொருள் கோடலுக்கு பின்வரும் நபிகளார் (ஸல்) அவர்களுடைய ஆணையினை அவர்கள் அதிகாரப்டுத்துகின்றனர்.

"பிறையினை கண்டு நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், பிறையினை கண்டுநோன்பை விட்டுவிடுங்கள். மேக மூட்டமாக இருந்தால் ஷஹ்பான் மாதத்தின்நாட்களை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்." (புஹாரி)

"பிறையினை கண்டு நோன்பு நோருங்கள், பிறையினை கண்டு நோன்பைவிட்டுவிடுங்கள். மாதம் உங்களில் இருந்து மறைக்கப்பட்டிருக்குமானால் 30ஆகபூரணப்படுத்திக் கொள்ளுங்கள்." (முஸ்லிம்)

"நபி (ஸல்) அவர்கள் றமழான் மாதம் குறித்து குறிப்பிடுகையில், பிறையை காணும்வரை நீங்கள் நோன்பு நோற்காதீர்கள், அதனை காணும் வரை நீங்கள் நோன்பைவிட்டுவிடவும் செய்யாதீர்கள். மேக மூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்." (புஹாரி, அஹ்மத்)

புலக்கண்களால் காண்பது இஜ்மாஉ'வினால் தேவைப்படுத்தப்படுகின்றது

ஹனபி சட்டவியல் அறிஞரான அபூபக்ர் இப்னு அலி அர்-ராஸி அல் ஜஸ்ஸாஸ் அவர்கள் தனது நூலான 'அஹ்கம் அல் குர்ஆனில்' குறிப்பிடுகையில்:
"நபி (ஸல்) அவர்கள் குறித்துக் காட்டிய 'பிறையை பார்த்து நோன்பு நோருங்கள்' என்ற வாசகமானது அல் குர்ஆனின் நபியே! ஆவர்கள் உம்மிடம் வளர்ந்தும் தேய்ந்தும்பிறக்கும் பிறைகளைப் பற்றி கேட்கின்றனர். நீர் கூறும்; அவை மனிதர்களுக்ககாலங்களையும், ஹஜ்ஜையும் அறிவிக்க கூடியவை.'(2:189) முஸ்லிம்கள் றமழானில் நோன்பு நோற்க பிறையினை புலக்கண்களினால் பார்த்திருந்தல் வேண்டும்' என்ற நிபந்தனையினை இவ் அல்குர்ஆன் வசனத்தினதும், ஹதிஸ்கள் மூலமாயும் அறிந்து வைத்துள்ளனர். எனவே, மாதத்தினை அறிவிக்கும் படியாக கூறப்பட்ட புதிய பிறையினை புலக்கண்களால் காண்பதென்பது இதற்கு தக்க சான்றாகும்." (அஹ்கம் அல் குர்ஆன், பகுதி.1, பக்.279)
அவர் தனது உரையில், "றமழான் மாதத்தினை கணிக்க நபி (ஸல்) அவர்களினால் கற்றுத்தரப்பட்ட ஒரே முறை புலக்கண்களால் பிறையினை காண்பதாகும். மேக மூட்டம் போன்ற தகாத காலநிலைகள் காரணமாக இருப்பின் 29ம் நாளில் அது சாத்தியமல்ல. இதன்போது ஷஹ்பான் மாதத்தினை 30 ஆக புரணப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே அடிப்படை விதியாகும்" எனக் கூறுகின்றார்.

மேலும் கூறுகையில், "நபிகளாரின் வாசகங்களிலிருந்து, புதிய பிறை புலக்கண்களுக்கு அகப்படாத வரையில் அம்மாதம் 30 நாட்களை கொண்டதாகும் என்பதே அடிப்படை விதியாகும். மேக மூட்டம் காரணமாக பிறையினை காண முடியாத வேளை நாம் ஒவ்வொரு மாத்தினையும் 30 ஆக கணக்கிடுவது கட்டாயமாகும். இவ்விதியானது இஸ்லாமிய மாதங்கள் யாவுக்கும் உரியதாகும். புலக்கண்களால் பிறையினை காண்பது மாதத்தின் நாட்களை 30ல் இருந்துகுறைப்பதாக மாத்திரமே அமையும் ." (அஹ்கம் அல் குர்ஆன், பகுதி.1,பக்.280)

கணிப்பினடிப்டையிலான நம்பிக்கையானது ஷரிஆவிற்கு முறனானதாகும்

"றமழான் மாதத்தினை வரவேற்பதிலோ அல்லது அதற்கு பிரியாவிடை அளிப்பதிலோ வானியல் ரீதியிலான கணிப்பிடலினை ஏற்றுக்கொள்வது கிடையாது என்பதில் அனைத்து சட்டவியல் அறிஞர்களுக்கும் மத்தியில் கருத்துடன்பாடு காணப்படுகின்றது" என அல்-ஜஸ்ஸாஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார். (அஹ்கம் அல்குர்ஆன், பகுதி.1, பக்.280)

"இதனால், இவ்வானியல் கணிப்பீடானது ஷரிஆவிற்கு மாற்றமானதாகஇருப்பதனால் இஜ்திஹாதின் வரம்பெல்லைக்குள் வராது. ஏனெனில், அல்குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ், சட்டவியலாளர்களினுடைய கருத்தொற்றுமை (இஜ்மாஉ) என்பன அதற்கு முற்றிலும் எதிரானது." (அஹ்கம் அல் குர்ஆன், பகுதி.1, பக். 280) 

ஆல்-ஜஸ்ஸாஸ் அவர்களின் கருத்தில், "புலக்கண்களால் கண்டு மாதத்தினைஆரம்பிப்பதன் முக்கிய விடயப்பொருள் யாதெனில் வணக்க வழிபாடுகளை வெறும்சாத்தியப்பாடான நிகழ்வுகிளில் (probability) அன்றி அதனை ஒருநிச்சயத்தன்மைவாய்ந்த நிகழ்வில் (certainty) மேற்கொள்ளவேயாகும்." ( உம்தத்அல்- காரி, பகுதி.10, பக். 265) 

இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறையை கண்டு நோன்பைநோற்றுக்கொள்ளுங்கள். பிறையை கண்டு நோன்பை விட்டு விடுங்கள். மேகமூட்டமாக இருப்பின் 30ஆக பூர்த்தி செய்துகொள்ளுங்கள்." இங்கு நபி (ஸல்) அவர்கள் ஷஹ்பான் மாதத்தில் மேக மூட்டமாக இருந்தால் அதனை 30 ஆக கணக்கிட்டுக் கொள்ளும்படியாக எம்மை பணிப்பதுடன் ஷவ்வால் மாதத்தினை ஆரம்பிக்க முன்பதாக றமழான் மாதத்தின் 29ம் நாளில் மேக மூட்டமாக இருப்பின் அதனை 30 ஆக கணக்கிட்டுக்கொள்ளும்படியும் எம்மை பணிக்கின்றார்கள். இதன்மூலம் நாம் எமது வணக்கங்களை ஒரு நிச்சயத்தன்மையான சான்றின்மூலங்களுடன் ஆரம்பிக்க முடிவதுடன் அதனை அவ்வாறான சான்றின்உதவியுடன் பூரணப்படுத்திக்கொண்டு நிறைவு செய்யவும் முடிகின்றது. இதனாலேயே நபிகளார் (ஸல்) அவர்கள் பிறிதொரு அறிவிப்பில்; 'நீங்கள் பிறையைகாணும் வரை நோன்பு நோற்காதீர்கள், பிறையை காணும் வரை அதனைவிட்டுவிடவும் செய்யாதீர்கள்' எனக் கூறுகின்றார்கள். மேலும் அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கினறார்கள்; 'றமழான் மாதத்தினை தீர்மானிக்கஷஹ்பான் மாதத்தின் பிறையை கணக்கிடுங்கள்' (திர்மிதி)."               (உம்தாத்அல்-காரி, பகுதி.10, பக்.117)     

அல் ஜஸ்ஸாஸ் அவர்கள் நவீன சட்டவியல் அறிஞர்களுள் ஒருவராவார். ஹனபி, மாலிகி, ஷாபிஇ மற்றும் ஹன்பலி முதலிய சட்டப்பிரிவுகளின் கருத்துக்களிலும் வானியல் கணிப்பீடானது இஸ்லாமிய மாதத்தினை தீர்மானிப்பதில் அதிகராம் வாய்ந்த முறையல்ல என்பது தெளிவானதாகும். மாதங்கள் ஒன்றில் புலக்கண்களால் பிறையை காண்பதன் மூலமாகவோ அல்லது மாதத்தின் நாட்களை 30ஆக பூரணப்படுத்துவதன் மூலமாகவோதான்  உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இத்தகைய வாதக் கருத்துக்களில் மேற்போந்த அறிஞர்கள் எவ்வாறான கருத்தினை கொண்டுள்ளனர் என்பதனை தொடர்ந்து ஆராய்வோம்.

காதி அபூ அல்- வலீத் அவர்கள் கூறகின்றார்கள் கணிப்பீட்டின் அடிப்படையில்ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் வேளை ஒருவர் அதற்காக தயாராகி கொண்டிருப்பார் 
ஆஹ்மத் இப்னு முஹம்மத் அல்- ஹமாவி, மற்றொரு ஹனபி சட்டவியல் அறிஞர் பின்வருமாறு கூறுகின்றார்;
"எமக்கு நோன்பினை ஆரம்பிக்கவும், அதனை நிறைவுசெய்து கொள்ளவுமான நிபந்தனை பிறையினை புலக்கண்களினால் காண்பதாகும், மாறாக வானவியல் கணிப்பீடானது இங்கு பின்பற்றப்படுவது கிடையாது. ஷாபி சட்டவியல் பரிவினை சார்ந்த, அல்- தஹ்ஸிப் அவர்கிளின் கருத்திலும் றமழானை ஆரம்பிப்பதிலும், அதனை நிறைவுசெய்து கொள்வதிலும் வானவியல் கணிப்பீடானது நம்பகத்தன்மையற்றதாகும்." (உயூன் அல்- பஸாயிர், பகுதி.02, பக்.66)

முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்-ஹர்ஷி அவர்கள் மாலிகி சட்டவியல் பிரிவினது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகையில்;
"எந்தவொரு நபரும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டடிய முறைக்கு மாற்றமாக எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது. நபி அவர்கள் புலக்கண்களினால்பிறையை கண்ட சான்றுகளை மையமாக வைத்து அல்லது நாட்களை 30 ஆகபூர்திசெய்தே நோன்பினை நோற்றார்கள். வேறு எந்தவொரு முறையும் நபிஅவர்களினால் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. ஆகவே, வானியல் கணிப்பீடும் அதன் நம்பக தன்மை குறித்தும் பல்வேறு வாக்கு வாதங்கள் காணப்படினும் நாம் அவை குறித்து கவனம் எடுக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை."  (ஷரஹ் முஹ்தஸர் கலீல் லி-அல்-ஹர்ஷி, பகுதி.2, பக்.237)

மாலிகி சட்டவியல் பரிவின் மற்றொரு அறிஞரான முஹம்மத் இப்னு அஹ்மத் அத்-தஷுக்கி இதே கருத்தினை குறிப்பிடுகையில்;
இமாம் மாலிக் அவர்கள், "பிறையை காண்பதற்கு எந்தவொரு சாத்தியங்களும் நிலவாத வேளை அல்லது மேக மூட்டமாக இருப்பின் மாதங்களை 30 ஆக புரணப்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்ற கருத்தினையே கொண்டிருந்தார்கள் என்று கூறுகின்றார்." (அல்- பாஜி, அல்-முன்தகா ஷரஹ் அல்- முஅத்தஹ், பகுதி.2, பக்.38)
"ஒருவர் நோன்பினை வரவேற்க காத்திருக்கையில் மற்றெருவர் வானியல் கணிப்பீட்டின் அடிப்படையில் நோன்பினை நோற்றிருப்பார். ஆனால் புலக்கண்ணால்பார்த்தோ அல்லது 30ஆக பூரணப்படுத்தியோ அல்லஎன காதி அபுல்- வலித் அவர்கள் கூறகின்றார்கள். (அல்- பாஜி, பகுதி.2, பக்.38)

அந்- நபவி அவர்களின் கருத்தில் மக்கள் கணிப்பீட்டின் மூலமாக தேவைப்படுத்தப்படும் வேளை பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்
ஸஹீஹ் அத்-தீன் இப்னு அஹ்மத் அர்-ரம்லி, பிரபல்யம் வாய்ந்த ஷாபிஇ சட்டவியல் அறிஞர் குறிப்பிடுகையில்;
"நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கணிப்பீட்டில் தங்கியிருக்கவில்லை. ஆனால் அதனை அவர்களின் கூற்றான 'நாம் எழுதவோ கணிக்கவோ தெரியாத தேசம்' என்பது நிராகரிக்கின்றது. இப்னு தகீக் அல்- ஈத் அவர்கள் இந்த வானியல் கணக்கிடலானது நோன்பினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான மூலமொன்றாக கருதப்பட முடியாததுஎன கூறுகின்றார். (பத்வா, பகுதி.2,59) 

இதே கருத்தினை மேலே குறிப்பிட்ட ஹதீஸினை ஆதாரம் காட்டி இமாம் யஹ்யா இப்னு ஸரப் அந் நபாவி அவர்கள் தனது அல்-மஜ்மு நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில்;
"மக்கள் கணிப்பீட்டினை பின்பற்ற முயற்சிப்பார்களாக இருந்தால் அது அவர்களுக்கு சிரமத்தினை உண்டுபண்ணும். ஏனெனில் கணக்கிடலானது ஒரு நகரத்தில்வாழ்கின்ற அனைவருக்கும் விளங்கிக்கொள்ள முடியுமான தன்மையுடையதல்ல. பெரும்பான்மையினருடைய கருத்தே சரியானநிலைப்பாடாகும். எதுவாக இருப்பினும் நபி (ஸல்) அவர்களினுடைய உபதேசம்இதனை நிராகரிப்பதாக உள்ளதனை நாம் உற்று நோக்க வேண்டும்."     (பத்வா, பகுதி.6, பக்.276)

அஷ்-ஷுர்கானி அவர்களும் இதனையே குறிப்பிடுகின்றார்;
"30ஆக பூர்த்தி செய்வதனை கணிப்பிடலுக்கு ஆதாரமாக காட்டுவது உண்மையானஒரு விடயமல்ல. ஏனெனில் மக்கள் அதனை பின்பற்றுவார்களாக இருந்தால் பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். காரணம் அவர்களில் மிகச்சிலர் மாத்திரமே அது பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள். அத்தோடு மக்களில் அதிகமானோர் எதனை அறிந்து வைத்திருக்கின்றார்களோ அதனையேஷரிஆ சட்டம் மக்களை பின்பற்ற அனுமதிக்கும்." ( ஷரஹ்அஷ்-ஷுர்கானி 'அலா முவ்தா மாலிக், பக்.152)
"மேக மூட்டமானது மிகவும் அரிதாகவே அடிவானத்தில் காணப்படும். றமழானைஆரம்பிப்பதற்கான ஷரிஆவினது நியாயம் புலக்கண்களினால் பிறையினைகாண்பதாகும். அதிகமான சட்டவியல் அறிஞர்கள் வேறு ஏதேனும் வழிமுறைகளைஇதற்காக வலியுறுத்தியதோ அல்லது பரிந்துரை செய்ததோ கிடையாது. இதுவே இமாம் ஷாபிஇ, மாலிக்கி, அபூஹனிபா ஆகியோரினதும், ஏனைய கடந்தகால மற்றும் தற்கால அறிஞர்களில் பெரும்பான்மையானோரினதும் கருத்தாகும்." (அப்துர்ரஹீம் இப்னு அல்-ஹுஸைன் அல் ஈராக்கி, தர்ஹ் அத்-தத்ரிப், பகுதி.04, பக்.113-114) 

கணிப்பீடானது அதீத நம்பிக்கையடனும் வானியல் சாஷ்திரத்துடனும் தொடர்புபட்டது 
குறிப்பு: இங்கு மேலே குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்தினடிப்படையில், நபி(ஸல்) அவர்களினுடைய காலத்தில் வானியல் என்பதும் வானியல் சாஷ்திரம் என்பதும்வேறு வேறான பகுதியாக பிரித்தறியப்பட்டிருக்கவில்லை.
 
"கணிப்பீட்டினை அவ்வாறன சட்டவியல் அறிஞர்கள் புறத்தொதுக்க முக்கியமானகாரணம் வானியல் சாஷ்திரத்துடனும், அதீதத்துடனும் அதற்கு காணப்படுகின்றநெருக்கமான தொடர்பாகும். இவை முற்றாக நபி(ஸல்) அவர்களினால் தடுக்கப்பட்டதாகும். அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் நபி (ஸல்) அவர்களினுடைய கூற்றுக்களை காரணம் காட்டி கணிப்பீட்டின் பிரயோகத்தினை கடுமையாக தடைசெய்கின்றார்கள். அதாவது; 'அதீத நம்பிக்கையின் விளைவாகஒருவர் வானியல் சாஷ்திரம் பற்றி எதனை கற்றுக்கொண்டாரோ அதனை தவிர, வேறு அதன் எந்தவொரு பகுதியையும் கற்றுக்கொள்ள வேண்டாம்.' உமர் (றழி) இவர்கள் கூறுகையில்; 'வானியல் சாஷ்திரத்தில் எவை உங்களுக்கு தரைவழியாகவும், கடல் வழியாகவும் வழிகாட்டவல்லதாக காணப்படுகின்றதோ அவைகளை கற்றுக்கொள்ளுங்கள் அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.' இதனால் திசையை அறிய உதவும் குறியீடுகளையும், சான்றுகளையும் தவிர ஏனைய வானியல் சாஷ்திர பகுதிகள் இப்னு ஹஜர் அவர்களின் கருத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும்." (அத்-தல்கிஸ், பகுதி.02, பக்.360)

இமாம் இப்னு தைய்மிய்யா அவர்களும் இதனை எதிர்ப்பதில் மிகவும் காரமாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அவர் கணிப்பிடலின் மூலமாகமாதத்தினை ஆரம்பிப்பதனையோ அல்லது அதனை முடிவறித்திக்கொள்வதனையோ ஆதரிக்கவில்லை. இவரின் ஆழமான ஆய்வில், பிறையினை காண்பது தொடர்பில்நிச்சயதன்மையான ஒரு முறையாக கணிப்பீடு காணப்படுகின்றது என்பதனை அவர்ஏற்றுக்கொள்ளவில்லை. இவரும் அல்-ஈராக்கி மற்றும் அல்-ஜஸ்ஸாஸ் முதலியோரின் கருத்துக்களுக்கு ஒப்பவே கருத்தினை ஒப்பளிக்கின்றார்.  

வர் மேலும் குறிப்பிடுகையில்;
"ஷரிஆ அறிஞர்களில் பிரதானமானவர்கள் கணிப்பீட்டின் வாயிலாக புதிய பிறையை தீர்மானிப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். வானியல்சாஷ்திரத்தின் அறிவு கூட கணிப்பிடலின் வாயிலாக புதிய பிறையினைஅதிகாரபூர்வமாக தீர்மானத்துக்கொள்ள முடியாது என ஏற்றுக்கொள்கின்றனர். இதனாலேயே, வானியல் சாஷ்திரத்தில் புலமைபெற்றவர்கள் கூட கணிப்பிடலை ஏற்பதனைவிடுத்தும் புறந்தள்ளுகின்றனர். இவை பற்றிய முழுமையான அறிவில்லாதவர்களும், அதனை பரம்பரையாக கற்றுத்தேறாதவர்களுமே தங்களுக்குள் அதனை வலியுறுத்திக்கொள்கின்றனர். இவ்வழிமுறையானது அடிப்படையில் அல்லாஹ்வின் வழிகாட்டலை மக்கள்மத்தியில் தடம்புறழச் செய்வதுடன் யூதர்களின் வழிகளை பின்பற்றவும்வழியமைத்து விடுகின்றது எனலாம்." (தகீக் அத்-தீன், அல் பதாவா அல் குப்றா, பகுதி.06, பக்.590)

இங்கு இப்னு தைமிய்யா அவர்கள் யூத ரெப்பினிக்கல் சயினால் அவர்களின் சந்திர மாதத்தினை ஆரம்பிப்பதற்காக கணிப்பிடலை அதிகாரபூர்வமாக அறிவித்தனை மேற்கோள் காட்டுவதனை நாம் அவதானிக்கலாம்.

மேலும், அவர்கள் தமது எதிர்ப்பு வெளிப்பாட்டினை கீழ் குறிப்பிடப்படுகின்ற பலமான வார்த்தைகளினால் பதிவு செய்கையில்;
"கணிப்பிடலானது ஹதீஸ்களில் குறிப்பிடப்படுவது போன்று சந்தேகமற நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாலும் அதே போன்று அவர்களுடைய தோழர்களினாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. .....ஆதலால் எவர் கணிப்பிடலினை தெடர்ந்தும் வலியுறுத்துகின்றாரோ அவர் தவறாக வழி நடாத்தப்பட்ட கண்டுபிடிப்பாளர் என்பதுடன் அவர் ஷரிஆ விடயத்தில் மட்டுமல்லாது வானியல் சாஷ்திரத்தின் தத்துவார்த்ததிலும் தவறை விடுகின்றார்." (தகீக் அத்-தீன், அல்பதாவா அல் குப்றா, பகுதி.25,பக். 207) 

 
இன்ஸா அல்லாஹ் தொடரும்…..

0 comments:

 

Browse