இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!

Thursday
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!


அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!


நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!


முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!


எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!


பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!


பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!


வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!


கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!


துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;


உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

காதலர் தினம் வேண்டாமாம், ஏன்?

Saturday

விசுவாசிகளே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதிர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களை சேர்ந்தவர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5:51)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களை நீங்கள் சானுக்கு சான், முழத்துக்கு முழம், திடனாக அடியொற்றுவீர்கள். அவர்கள் ஒரு உடும்பின் பொந்தினுள் நுளைந்தால் நீங்களும் அதில் நுழைய முற்படுவீர்கள். அவர்கள் யூதர்களும் கிறித்தவர்களுமா? அல்லாஹ்வின் தூதரே என நாம் கேட்டோம். அதற்கு அவர் வேறு யார்” எனக் கேட்டார். அறிவிப்பவர்: அபூ ஸஈத், நூல்: புகாரி.
இன்று நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு காதலர் தினம் எமது இளைஞர் யுவதிகளால் வெகுவாக கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயம். இதனை யூத கலாச்சாரமாக எடுத்துக்கொள்வதா? அல்லது சினிமாவின் சீரழிப்பாக எடுத்துக்கொள்வதா? என்பதில் கருத்து முறண்பாடுகள் இருக்கின்ற போதிலும் அது இஸ்லாமிய கலாச்சாரமில்லை என்பது நாம் யாவரும் தெளிவு பெற்றதொரு விடயம்.
இதனைக் கொண்டாடுவதில் பாடசாலை மாணவ மாணவிகள் தொடக்கம்: இதற்காக பரிசுப் பொருட்களை விற்பனை செய்யும் முஸ்லிம் தொழில் அதிபர்கள் வரைக்கும் ஒரு விடயத்தினை தெளிவாக புரிந்துகொள்ளல் வேண்டும். அதுதான் Valentines Day என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன? இதற்கு 'காதலர் தினம்' என பெயர் வைத்தது யார்? இதனால் நமது சமூகம் ஈமானிய அடிப்படையில் மற்றும் சமூக அமைப்பில் எவ்வாறான இழப்புக்களை சந்திக்கின்றது என்பதனை தயவு செய்து சிந்திக்க வேண்டும்.
Valentines Day என்ற இந்த தினம் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்து தற்போது பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. உரோமர்கள் தங்கள் கால்நடைகள், மற்றும் பொருளாதாரம் என்பவற்றுக்கு பொறுப்பான கடவுளாக லூப்பர்ஸ் எனும் கடவுளை வணங்கி வந்தனர். இந்த கடவுளுக்கு நாலாம் நூற்றாண்டில் பெப்ரவரி மாதம் 14ம் திகதி பூசை நடாத்தி விழாக்கோலம் பூண்டு கொண்டாடினர். அன்றைய தினத்தில் ஒரு ஆட்டை அறுத்து அதன் தோலை நாய் மற்றும் ஆட்டு இரத்தத்தில் துவட்டி அதனை இரு இளைஞர்கள் அணிந்து கொண்டு ஒரு இளம் பெண்ணை சவுக்கால் அடிப்பார்கள். அப்பெண் நல்ல முறையாக குழந்தையை வளர்ப்பாள் என்றும் நல்ல குடும்ப பொறுப்புள்ள பெண்ணாக திகழ்வாள் என்றும் அந்த இளைஞர்களுக்கும் இளம் பெண்ணுக்கும் அச்சமூகத்தால் பெரும் மதிப்பு கிட்டியது.
காலப்போக்கில் இந்த சிலை வணக்கம் வேறுவடிவம் பெற்றது. அதாவது இளம் பெண்களின் பெயர்கள் ஒரு துண்டுச் சீட்டில் எழுதப்பட்டு ஒரு சாடியில் போடப்படும். பின் அதிலிருந்து வாலிபர்கள் ஒவ்வொரு துண்டாக எடுப்பார்கள். அத்துண்டில் யார் பெயர் இருக்குமோ அந்தப் பெண் ஒருவருடத்திற்கு அந்த வாலிபருடன் தற்காலிக மனைவியாக வாழவேண்டும் என்ற விபச்சார கலாச்சாரமாக இந்த Valentines Day எனும் காதலர் தினம் உருப்பெற்றது.
இதனை Loobbar Galiya day என்று; அப்போது அழைக்கப்பட்டது. பின்பு கிறிஸ்தவ அமைப்புக்கள் இதனை நிறுத்த பெரிதும் முயற்சித்து முடிவில் தோற்றுப்போயின.
இதனை நிறுத்த முடியாத போது கி.பி 496ல் பொப் கிளாசியஸ் என்பவர் இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டார். அதன் விளைவாக பெண்களின் பெயர்களுக்கு பதிலாக துறவிகளின் பெயர்கள் துண்டுச்சீட்டில் எழுதப்பட்டு அதனை எடுப்பவர் அந்த துறவியை பின்பற்றி வாழ வேண்டும் எனத் திட்டமிட்டார். இந்த துறவிகள்தான் Valentines என அழைக்கப்பட்டனர். 50க்கு மேற்பட்ட Valentines களின் கதைகள் கிறிஸ்துவர்களால் சொல்லப்படுகின்றது. 1660ல் மன்னர் இரண்டாம் சார்ளஸ் தனது மன இச்சைக்காக மீண்டும் இதனை விபச்சார கலாச்சாரமாகவே ஆரம்பித்தார்.
எது எவ்வாறு இருப்பினும் இத்தினத்தை கொண்டாடுவதன் மூலம் அனாச்சாரம் தெடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் 1776ல் பிரான்சில் இது தடைசெய்யப்பட்டது. தொடர்ந்து இதே ஆண்டில் இத்தாலி, ஒஸ்ட்ரியா, ஹங்கேரி, ஜேர்மனி முதலிய நாடுகளிலும் தடைசெய்யப்பட்டது. இதற்கு முன்னதாகவே இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது.
அமெரிக்காவில் வியாபார நோக்கில் 1840ல் Easter A. Hawlend என்பவரினால் முதல் காதலர் தின அட்டை வெளியடப்பட்டது. அப்போது 50000 அமெரிக்க டாலர்களை இலாபமாக ஈட்டினார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை காதலர் தினப் பரிசுப்பொருட்கள் வாழ்த்து அட்டை என வியாபாரம் அமர்க்களமாக நடைபெற்றுவருகின்றது.
எனவே, இது ஒரு சிலை வணக்கத்தில் உருவாகி அநாச்சாரத்தில் நடைபோட்டு வியாபாரத்தில் நிலைப்பட்டாலும் இஸ்லாத்தின் விரோதிகளான யூத கிறித்துவர்களின் மானக்கேடான செயலாகவுள்ளது. இதனை உருவாக்கியவர்கள் அதனை பின்பற்றுகின்றார்களோ இல்லையோ நமது சமூகம் ஒவ்வொரு வருடமும் தவவறாமல் பின்பற்றுவதனை நமதூர் சுவர்களும், வானொலி, தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி போன்ற ஊடகங்களும் உண்மைப்படுத்த அதிகம் துடிக்கின்றன.
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைப்பிடித்து, சக்காத்தும் கொடுத்து,(அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகின்றார்களோ அவர்கள்தாம், அல்லாஹ்வையும் அவனது  தூதரையம் விசுவாசிகளையும் யார் நேசர்களாக ஆக்குகின்றார்களோ அவர்கள்தாம், அல்லாஹ்வின் கூட்டத்தினர் ஆவார்கள். நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள். (5:55-56)
நீங்கள் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளர்கள். உங்கள் கண்காணிப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். (புகாரி)
எனவே நாம் அனைவரும் தானும் மாறி தம் சமூகத்தையும் கண்காணிப்போமாக!
எனக்கூறிவிட்டு எல்லா துண்டுப்பிரசரங்களும், பிரச்சாரகர்களும் தமது கடமை முடிந்து விட்டதா எண்ணிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிடுவர். வெளிமையை பொறுத்தமட்டில் இவர்களைப் போன்ற குழப்ப வாதிகளையும், சமூகத்தை விற்றுப்பிழைக்கும் தொண்டர்களையும் விட்டுவைப்பது தவறு. அதுதான் நாம் சமூகத்தில் தவறொன்றை சுட்டிக்காட்ட முற்பட்டால் அதற்கான தீர்வுகளையும் தெளிவாக முன்வைத்தல் அவசியம். அல்லாத போது ஆயுள் முழுக்க இவ்வாறு பேசிக்கொண்டுதான் இருக்க நேரிடும். இதனை தெரிவித்தால் இவர்கள் முறண்டு பிடிக்கின்றனர். அதாவது, அவர்கள் சமூத்ததையும் நம்மையும் குழப்பவருகின்றவர்கள் பட்டியலில் சேர்த்து விடுகின்றனர். ஏன்? கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற பொழுது அதனை யதார்த்த நிகழ்வோடு பொருத்திப் பார்க்க தவறுவதுதான் வேறென்ன.
மேலே கூறப்பட்ட யாவையும் வெளிமை ஏற்றுக்கொள்கின்றது. ஆனாலும், முடுக்கிவிடப்படுகின்ற பிரச்சாரம் ஏன் பக்கச்சார்பானதாக, ஒரு விழி மட்டும் பிதுங்க வார்த்தைகளை அள்ளித் தெளித்து மக்களை மீண்டும் வேறு ஒரு திசைக்கு இட்டுச்செல்கின்றது? மக்களை நேர்வழிப்படுத்துகின்ற போதுகூட பிழையான வழிகள் மக்களுக்கு மீண்டும் ஊட்டப்படுவதனை வெளிமை எதிர்க்கின்றது. அதாவது காதலர் தினம் கொண்டாடலாமா? என்ற கேள்விக்கு நாம் தெளிவு அளிப்போமாக இருந்தால், இதுபற்றி இஸ்லாம் எதனைக் கூறுகின்றது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும். இத்தோடு விட்டுவிடாமல், இஸ்லாத்தில் 'காதல்' என்பது எவ்வாறாக நோக்கப்படுகின்றது என்பதனையும் தெளிவுபடுத்த முற்பட வேண்டும்.
மனிதன் இயற்கையான பண்புகளுக்கு கட்டுப்பட்டவன். ஒரு மனிதனுக்கு காதல் என்கின்ற விடயத்தில் ஈடுபாடு இருக்கின்றது என்றால் இஸ்லாம் ஏதோவொரு வகையில் அதனைப்பற்றி கூறியிருக்க வேண்டும். அச்செய்தி மட்டுப்பாடானதாக அல்லது கட்டடுப்பாடானதாக இருக்கலாம். ஏனெனில் இஸ்லாம் மனிதனின் இயல்புகளுக்கு அதிகூடிய மதிப்பனை அளிக்கின்ற மார்க்கம். காதல் செய்கின்ற ஒருவனிடத்தில் அது பற்றி இஸ்லாத்தின் அடிப்படை இருக்குமாக இருந்தால் அனுடைய காதல் என்பது ஒழுக்கவியலுடன் ஒத்துப்பொவதாய் இருந்திருக்கும். ஆனால் இன்று இவர்கள் கட்டவிழ்த்து விடுகின்ற கருத்து யாதெனில், காதல் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைகளுக்க முறனானது என்பது போலாகும். இது அறியாமையின் வெளிப்பாடுதான் என்பதனை வெளிமை தெளிவாக கூறுகின்றது. இவ்வாறு கூறுவதனால் வெளிமையை காதலர்களுக்கு சார்பாக கருத்துக்கூறுவதாக சித்தரிக்க மனம் எண்ணுமானால் அதுதான் மடத்தனம்.
மேலும், அவர்கள் கூறுகின்றார்கள் இது அந்நிய மத கலாச்சாரங்களில் இருந்து வந்ததொன்றாகும். அவ்வாறாயின், காதல் தொடர்பில் இஸ்லாம் கூறும் கலாச்சாரம் என்ன? முஸ்லிம் சமூகம் காதல் எனும் மனிதப்பண்பிலிருந்து விலகிய சமூகமா? அல்லது முஸ்லிம்களிடத்தில் மனிதனின் இயல்பான 'காதல்' எனும் பண்பு இருக்கவே கூடாதா? இருக்க முடியாதா? அவ்வாறாயின், இஸ்லாம் மனிதனுக்கு, அவனுடைய இயற்கைத் தன்மைக்கு மாற்றமாக சட்டங்களை முன்வைக்கின்றதா? என்றெல்லாம் எழுகின்ற வினாக்களுக்கு இவர்கள் அளிக்கும் விடைதான் என்ன?
ஒன்றே ஒன்றுதான். அதுதான் இவர்கள் மேற்கத்தைய தத்துவார்த சிந்தனையில் வளர்ந்து சமூகத்துள் ஊடறுத்துள்ள குழப்பவாதிகள். அவர்கள் யார்?
இவர்களெல்லாம் முழுமையாக நுழையுங்கள்” என்பதனால் விங்கிக்கொண்டதுதான் என்னவோ!
 

Browse