பெண்களின் ஜனாஸா - சில விளக்கங்கள்

Monday
ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.

''(மிக்கவல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:27)

'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே' (4:78)

ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.

ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.

அலி(ரழி) அவர்கள் தம் மனைவியான பாத்திமா (ரழி) அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
அபூபக்கர்(ரழி) அவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.

கீழங்கிஇ தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.

''நபி(ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்ஸூம்(ரழி) மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கிஇ பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டுஇ பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணிஇ பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்'' என லைலா அத்தகபிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)

3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்முஅதிய்யா(ரழி) அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.

''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அபூஹாரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)

6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பாரி வைப்பதும்இ ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும்இ தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.

''துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், ''சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.

''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)

முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''

''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும்இ கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)

அதேநேரத்தில் ஒப்பாரியும்இ அனுமதிக்கப்படாத செயல்களும்இ அல்லாஹ்வின் விதியின் மீது கோபப் படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்

கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?

Wednesday
இந்தச் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் அழுதது. அதற்கானகாரணங்களைத் தேடி என் மனம் அலை பாய்ந்தது. நான் மால்டா சிறையிலிருக்கும் பொழுது இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்'. – இப்படிக் கூறியது ஷேகுல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் உல் ஹஸன். 1920ல் தனது 69 வயதில் இதைக் கூறிய அவர்கள், அக்காலத்தில் சிறந்த மார்க்க அறிஞராக திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஆங்கிலேய காலணி ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடியவர்கள்.

            ஆலிம்கள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பொழுது அவர்கள் இதைக் குறிப்பிட்டார்கள். சமுதாயத்தின் அவல நிலைக்கு என்ன காரணம் கூறப்போகிறார்கள் என்று கூட்டம் அவர்களை ஆவலுடன் நோக்கியது.

            அவர்கள் கூறினார்கள் : 'நமது பிரச்சனைகளுக்கு இரண்டே இரண்டு காரணங்கள் தாம் உள்ளன. அவை;

1.    நாம் குர்ஆனைக் கைவிட்டது.
2.    நமக்கிடையே நடக்கும் உள்சண்டைகள்'.

            இப்படிக் கூறிய மௌலானா அவர்கள். அதன்பிறகு சொற்ப காலமே உயிர் வாழ்ந்தார்கள். அந்தச் சொற்ப காலமும் இந்த காரணங்களைக் களைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்கு கடுமையாக உழைத்தார்கள்.

இந்தக் காரணங்கள் எவ்வளவு உண்மை நிறைந்தவை என்பது நமக்கெல்லாம் புலப்படும். இந்த இரண்டு காரணங்களும் ஒன்றுக் கொன்று சம்பந்தமுடையவை. இரண்டாவது காரணம் முதல் காரணத்தாலேயே உருவாகிறது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களை சகோதரப் பாசமுள்ள ஒரே சமுதாயம் எனப் பிரகடணப்படுத்துகிறது. உள்சண்டைகளைப் பற்றி அது கடுமையாக எச்சரிக்கிறது. நாம் திருக்குர்ஆன் விடுத்த பிரகடனத்தையும் எச்சரிக்கையையும் மறந்துவிட்டோம். இன்று அகிலமெங்கும் பரவி வாழும் 120 கோடி  முஸ்லிம்களும் பல கூறுகளாக பிரிந்து கிடக்கின்றோம். சில குறுகிய மனப்போக்குள்ள சுய நல காரணங்களுக்காகவே நமக்குள் பெரும்பாலான சண்டைகள் நடக்கின்றன.

இஸ்லாத்தைப் பயன்படுத்தி இந்தச் சண்டைகளை நாம் சீர்திருத்திக் கொள்ள இயலும். ஆனால்இ அந்தோ துரதிஷ்டம்...! இஸ்லாத்தின் பெயராலெயே நாம் பிளவுபடுகிறோம். மேலும் மேலும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறோம். சிக்கலுக்குள் சிக்கலை உருவாக்குகிறோம். சின்னச் சின்ன ஃபிக்ஹு பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.மார்க்க விஷயங்களை அர்த்தப்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் எழுவது இயல்பு. இந்தச் சிறிய வேறுபாடுகளைஇ சிறிய சட்டப் பிரச்சனைகளைப் பெரிய யுத்தகளமாக மாற்றி விடுகிறோம். ஆனால் இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையான விஷயங்கள் அங்கு கைமீறிப் போவதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

இன்று இஸ்லாம் எல்லாத் திசைகளிலிருந்தும்இ எல்லா முனைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையிலேயே நாம் நமக்குள்ளான சண்டைகளை நடத்துகிறோம். இஸ்லாத்தில் ஹராமாக்கப் பட்டவைகள் இன்று ஹலாலாக்கப்படுகின்றன. பல தெய்வக் கொள்கையுடையோரின் பழக்க வழக்கங்கள் இன்று மார்க்கத்தை அறியாத நம்மவர்களிடையே ஊடுருவுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையே பிரதானமாகக் கொள்ளும் ஹீடனிஸம் எனும் கொள்கை நம்மவர்களை ஆக்கிரமிக்கிறது. வெட்கமின்மை வரவேற்கப்படுகின்றன. ஒழுக்கச் சீர்கேடுகள் நவநாகரீக கலாச்சாரமாக நம்பப்படுகின்றன. நமது சமுதாயம் சினிமாப் படங்களாலும், தொலைக்காட்சிப்பெட்டிகளாலும், ஆபாச இலக்கியங்களாலும் சீரழிக்கப்படுகின்றன. நமது சமுதாயத்தின் அனைத்து அடுக்கு மக்களிடமும் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாரிசுகள் தாமே நாம்.....!   இவைகளை அவர்கள் அனுமதித்தார்களா? இவைகளுக்கு எதிராக நமது கவனத்தை திருப்ப வேண்டாமா? இத்தனைக் கொடுமைகளும், தீமைகளும் அரங்கேறி வரும் இந்த உலகம் ஒருநாள் அழிந்து விடும். மறுஉலகத்தில் நாம் எழுப்பப்படுவோம். இறைவன் அவன் முன் நிறுத்தி நம்மிடம் கேட்பான். 'இந்தக் கொடுமைகளுக்கும்இ தீமைகளுக்கும் எதிராக நீ என்னப்பா செய்தாய்?'.


பல முஸ்லிம்கள் சில வேறுபாடுகளைக் கண்டு வேறு மாதிரியாக சிந்திக்கின்றனர். ஃபிக்ஹுடைய சட்டங்கள் அனைத்தையும் எடுத்து விட்டு வேறு ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சாத்தியமானதும் அல்லஇ விரும்பத்தக்கதும் அல்ல. ஒவ்வொரு விஷயத்திலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒத்தகருத்து இருக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அனைவரும் வாய் பேச முடியாத ஊமைகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். அல்லது அவர்கள் நாணயமற்றவர்களாக இருக்க வேண்டும். தங்களுக்கு தவறு என்று தெரிவதை ஏற்றுக் கொள்வதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.
            
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கூட இருந்த நபித்தோழர்களுக்கே ஃபிக்ஹு விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதே போல் 'இஜ்திஹாது' செய்யும் முஜ்தஹிதீன்களிடமும் கருத்து வேறுபாடுகள் நிலவின.
            ஆனால் கண்ணியமிக்க நபித்தோழர்களோ, மதிப்புமிக்க முஜ்தஹிதீன்களோ அவைகளைச் சண்டைகளாக மாற்ற வில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபட்டார்கள். ஆனால் அவர்களிடையே நிலவி வந்த அன்பையும்இ அரவணைப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. அவைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடையே இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் பொன்னொளி மேல் மின்னியது.

குர்ஆனும் ஹதீஸும் எதனைத் தவறு என்று சொல்கின்றனவோ அவ்விஷயங்களில் அவர்கள் எந்தக் கருத்து வேறுபாடும் கொள்ளவில்லை கொள்ளவும் முடியாது. மார்க்க விஷயங்களை, கொள்கையை, நம்பிக்கையை விட்டுக் கொடுக்க இஸ்லாத்தில் இடமே இல்லை. ஷரீஅத் எவைகளை ஹலால் என்று அனுமதிக்கிறதோ, எவைகளை ஹராம் என்று விலக்குகின்றதோ அவ்விஷயங்களை மாற்றுவதற்கோ, கூட்டுவதற்கோ,  குறைப்பதற்கோ நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

சில சமயம் ஒரு சில கருத்து வேறுபாடுகள் நம்மிடையே ஏற்பட  சாத்தியமுண்டு. இது எல்லா காலகட்டத்திலும் நடந்ததுள்ளது.  இம்மாதிரியான ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளால் இன்னொரு நன்மையும் உண்டு. ஒரு பிரச்சனையின் பல கோணங்கள்இ தெளிவுகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும். இது பல நன்மைகளை விளைவிக்கும். ஆனால் கருத்து வேறுபாடுகளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படைகளில் அணுகாமல், சில நம்பிக்கைகள் இ பாரம்பரிய நடைமுறைகள் என்கிற நோக்கில் சுய நம்பிக்கையின் விளைவால் அடாவடியாக நடந்து கொண்டு இ அல்லது அவர்களுக்கென்று ஒரு பிரிவாரைச் சேர்த்துக் கொண்டால்தான் சண்டைகள் ஆரம்பமாகின்றன.

           
பெரும்பாலான அமைப்பினர் தாங்கள் எந்தத்துறையைச்சார்ந்திருக்கிறார்களோஇஅந்தந்த துறைகளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் வகையில் தங்களால் முடிந்த நல்ல பணிகளைச் செய்து வருகிறார்கள். இந்த அமைப்பினர் தங்களுக்குள்ளால் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒரு ஒத்துழைப்பு எனும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவுக் கரங்களை நீட்டி கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் இருப்பது இயல்பே என்ற உணர்வு மேலோங்கிட வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைய இதுவே நல்ல வழி. இது நடந்தால் முஸ்லிம்களாகிய நாம்  இந்த உலகில் தவிர்க்க இயலாத சக்தியாக மாறி விடுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
           
            அடக்கமான நல்ல மனிதர்கள் மறைந்து போய் விடவில்லை. நல்ல மனிதர்களை நாணிலதித்தில் மறுமலர்ச்சி செய்ய வேண்டும். குறுகிய வட்டத்திற்குள்ளிருக்கும் இந்தச் சமுதாயத்தை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். பிளவுபட்டு கிடக்கும் நாம் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒன்றுபட்டு இந்தப் பூமிப் பந்தின் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.


நன்றி : -ஃகாலித் பேக்,  இம்பேக்ட் இண்டர்நேசனல்

மனித உள்ளம்

Sunday

மனித உள்ளம் எப்பொழுதும் அதற்குரிய இச்சைகளை அடைந்துவிடுவதிலேயே விருப்பமாய் இருக்கும். அது எப்போதும் தனக்கு களைப்பையும் சிரமத்தையும் தரக்கூடிய பொறுப்புக்களிலிருந்து விரண்டோடும் தன்மை கொண்டது. அல்லது தனது இச்சைகளை திருப்திப்படுத்தக்கூடிய ஏதாவதொன்றைப் பெற்றுத்தரகின்ற செயற்பாடுகளாக இல்லாதபோது அந்த செயற்பாடுகளைச் செய்ய முன்வரமாட்டாது.

எனவேதான் மனித உள்ளம் எப்பொழுதும் இபாதத்துகள் செய்வதனை பாரமாகக் கருதுகின்றது. அவனது உள்ளத்தில் ஈமான் நுழைகின்றபோது இந்நிலையிலிருந்து அவனது உள்ளம் உயர்ந்துவிடும். அப்படி உயர்ந்துவிட்டால் அவனது மனோ இச்சையோடு போராடி அவன் வெற்றி பெறுவான். அப்போது அவனது உள்ளம் அவனது கட்டுப்பாட்டிற்குள்ளால் காணப்படும். அவன் ஏவுகின்றவற்றை அது செய்யும். ஆனால் இத்தோடு அவனுக்கும் அவனது உள்ளத்திற்கும் இடையிலான போராட்டம் நின்றுவிட மாட்டாது. அதற்கப்பாலும் அவனது உள்ளம் அவனோடு போராடும்.

அவன் செய்கின்ற நல்ல செயற்பாடுகளை மக்கள் முன்னால் வெளிக்காட்டி அதற்காக அவன் புகழப்பட வேண்டும், கண்ணிப்படுத்தப்பட வேண்டும் என்று அவனது உள்ளம் அவனுடன் போராடும். இது மனோ  இச்சைக்கு மிகவும் விருப்பமான ஒரு விடயமாகும்.

இதற்குரிய சந்தர்ப்பம் அதற்கு வழங்கப்படாவிட்டால் அவனுக்குள்ளாலேயே அவனது செயற்பாட்டை பெரிதாகக் காட்டி அவனைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதனால் பிறரை விட தான் உயார்ந்தவன் என்று அவன் நினைக்கத் தலைப்படுவான். இவை அனைத்தும் அல்லாஹ்வை விட்டும் அவனைத் தூரமாக்கும். அவனுடைய செயற்பாடுகளுக்குரிய பிரயோசனத்தை பெற்றுத்தராது தடுக்கும். ஏனெனில் அவன் இதன் மூலம் மறைவான இணை வைத்தலில் வீழ்ந்து விடுகின்றான். இது மிக ஆபத்தான இணை வைப்பாகும்.
 

Browse