பெருநாள் திடலில் திட்டுதல்

Monday

உண்மையை கூறுகின்ற போது அது முரண்பாடாகத்தான் தோன்றும். அவ்வாறு உண்மையை கூறாமல் அமைதிகாக்கிற போது அது நயவஞ்கத்தனமாக மாறிவிடும். இதனால் நயவஞ்சகத்தனமாக இருப்பதை விட முரண்பாடு கொண்டவனாக இருப்பது எவ்வளவோ சிறந்தது.
நேற்று பெருநாள் திடலுக்கு சென்றிருந்தபோது அங்கே சில சம்பவங்களும்> சூழ்நிலைகளும் இந்த முரண்பாட்டுக்கென இறைவன் தயாரித்தது போல் இருந்தன. ஆனால் அங்கு உறுத்துவதற்கும் சில காட்சிகள் இருந்தன. பொருநாள் தினத்தன்று திடலுக்கு தொழுகைக்காக வருகின்றவர்கள் தாம் கொண்டுவந்த ஈகைகளை அங்கு இறைவனின் பள்ளிவாயலுக்கு அளிப்பது வழமை. அவ்வாறு தமது ஈகைகளை அள்ளி வழங்குவதற்கு ஏற்பாடாக வழக்கில் ஒரு துணித்துண்டை அல்லது அதற்கு சமமான ஏதாவது பொருத்தமான பாத்திரங்களை வைத்துவிடுவது பாள்ளவாயல் நிருவாகத்தினரை சாரும். ஆனால் நேற்று நான் கண்ட காட்சி ஏதோ விசித்திரமாகவும்> வினோதமாகவும்> நவீனமாகவும் இருந்தது. அதாவது> அதற்கென இரும்பினால் தயாரிக்கப்பட்ட சுமார் 5 அடிக்கள் உயரமான ஸ்டாண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் மேல் மக்கள் தமது ஈகைகளை வழங்குவதற்கென பசின்களும் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான ஸ்டாண்டுகளும் பசின்களுமாக அந்த திடலில் ஏறக்குறைய 13 இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. எப்படியும் அவற்றில் சுமார் 8-9 பெண்கள் பகுதியிலேயே இருந்தன. சிலவேளை பெண்கள் அதிகம் ஈகை செலுத்துவதாக குறித்த பள்ளி நிருவாகம் முடிவு செய்திருக்கலாம். இந்த புதிது புனையும் சிந்தனையும்> நவீன திட்டங்களும் முழுமையாக அப்பள்ளிவாயல் ஏற்பாட்டுக் குழுவையே சாரும்.
அடுத்து தொழுகை நிறைவடைந்ததும்> குத்பா பேருரை இடம்பெற்றது. ஆரம்பத்தில் குத்பா பேருரை மிகவும் சரளமாக சென்று கொண்டிருந்தது. தியாகம் என்றால் என்ன? இஸ்லாம் எதனை தியாகம் என வலியுறுத்துகிறது? உண்மையான முஸ்லிம் தனது வாழ்நாளில் எவ்வாறு தியாகங்களை செய்ய முன்வர வேண்டும் என்பன போன்ற விடயங்களை சொல்லித் தந்த அக்குத்பா பேருரையானது> ஈற்றில் தியாகமற்ற அரசியல்வாதிகளை எல்லாம் திட்டி தீர்த்து> அவர்களை நாய்கள் என்றெல்லாம் தூற்றி> அரசின் இனவாத போக்கினை கண்டித்து> சிங்கள மக்களை இனவெறியர்கள் எனக் கொண்டாடி> அவர்களுக்கு தீவிரவாதிகள் எனப் பட்டங்கொடுத்து மிகவும் உணர்ச்சி பூர்வமாக நிறைவுக்கு வந்தது. 
இந்நிலை காரணமாக இக்குத்பா பேருரையின் பின்னணியினை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. முஸ்லிம் மக்களான எமக்கு இஸ்லாம் இரண்டு பெருநாட்களை அனுமதித்திருக்கிறது. ஒன்று ஈகைத் திருநாள் எனப்படுகின்ற நோன்பு பெருநாள் மற்றயது தியாகத் திருநாள் என்று கொண்டாடப்படுகின்ற ஹஐ;{ப் பெருநாள். பொதுவாக குத்பா பேருரைகள் ஈகைத் திருநாளில் ஈகை அளிப்பதன் முக்கியத்துவம்> அதனால் இம்மை மறுமையின் ஈடேற்ற பயன் என்பனவற்றை கூறி நிறைவு பெறுவது வழமை. அதேபோன்று தியாகத் திருநாளில் இஸ்லாம் எவ்வாறு தியாகத்திற்கு பெயர் போனது என்ற விடயங்களை மக்களுக்கு நினைவுபடுத்தி முடிவுக்கு வரும். ஆனால் இங்கு வழமைக்கு மாறாக ஈகைத் திருநாளில் தியாகம் பற்றி கூறப்பட்டது. சிலவேளை தற்போதைய உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்கள் காரணமாக அவ்வாறு பேசப்படுகிறது என நினைத்திருந்தாலும்> பேச்சு இறுதியில் தற்போதைய நாட்டில் இடம்பெறயிருக்கும் தேர்தலுக்குள் சென்றதனால் நினைவு பிழைத்துப் போனது.
நபி வழியை பின்பற்றுகின்றோம் என்று கூறிக்கொள்கின்ற பிரசங்கிகள் தமது மேடையை நபி வழிக்கு மாற்றமாக பின்பற்றுவது அவர்களின் அதிக பிரசங்கித்தனத்தையே காட்டுகிறது. குத்பா பிரசங்கங்கள் என்பது இஸ்லாத்தில் மக்கள் முன் கத்துவதற்கும்> நன்றாக பேசுகிறான் என்று அவர்கள் கூறுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல. மாறாக> மக்களை வழிநடாத்தவும்> அவர்களின் மனதை அமைதியான முறையில் தட்டி எழுப்பவும்> அவர்களுக்கு கூறப்படுகின்ற விடயங்கள் மீது பற்றும்> பிடிப்பும் ஏற்படுத்துவதற்கு வழிகோலுவதாக அமைய வேண்டும். ஊணர்ச்சிகளை வெளிப்படுத்தி மற்றவர்களை தூசித்து> தம்மிடம் மறைமுகமாக இருக்கின்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு இடமாகவோ> அல்லது தமக்கென ஒரு கூட்டத்தினை தயார் செய்து அவர்களுக்குள் வெறும்  உணர்ச்சிகளை பொங்க வைத்து கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவோ இஸ்லாம் இந்த குத்பா மேடைகளை பயன்படுத்தவில்லை என்பதுடன் அதனை அனுமதித்ததும் கிடையாது.
இஸ்லாம் நாய்களுக்கு (மிருகத்தை குறிப்பிடுகிறேன்) அதற்கே உரித்தான மதிப்பையும் மரியாதையையும் கொடுத்தே தன்னை வளர்த்தெடுத்தது என்பதனை இந்த பிரசங்கிகள் கருத்திற்கொள்ள் வேண்டும். மனிதர்களை மதிக்கவேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதனால்தான் இஸ்லாம் அடிமை விடுதலை பற்றி பேசியது. அப்படியிருக்கையில் மனிதர்களை நாய்களுக்கு ஒப்பிட்டு குத்பா நடத்துவது எந்த வகையில் நியாயம்? (அரபிக் குதிரையனாலும் பிறவிக் குணம் போகாது) மேலாக> இந்த நாட்டில் ஏனைய நாடுகளை விட எமக்கு இருக்கின்ற மத சுதந்திரமும்> உரிமைகளும் அளப்பரியது. சில அரபு நாடுகளில் இலகுவாக செய்துவிட முடியாத மார்க்க காரியங்களை எல்லாம் இந்த அரசு எமது முஸ்லிம் மக்களுக்கு அனுமதியளித்திருக்கிறது. அந்த மத சதந்திரத்தையும்> உரிமைகளையும் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த தௌஹீது வாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் ஒரு பள்ளி இருக்க> அதன் பொதுவில் இன்னொரு பள்ளியை கட்டிக் கொண்டு ஸ்பீக்கரில் சண்டை பிடித்துக் கொண்டு வருகின்றனர் என்பதனை நாம் மறந்துவிட முடியாது. அருகருகே பள்ளிகளை அமைத்துக் கொண்டு வசைபாடிய இவர்களுக்கு இன்று பள்ளியின் அருகில் ஒரு பொளத்த விகாரை இருப்பது பிடிக்கவில்லை. சன அடத்திக்கும்> தேவைக்கும் சம்பந்தமில்லாமல் பள்ளிகளை அறை குறையாக நிர்மானித்து தமக்கென மறைமுகமாக இருக்கின்ற வெளிநாட்டு திட்டங்களை அமுல்செய்கின்ற இவர்களுக்கு ஒரு கும்பிடுகின்ற பௌத்தன் சிலை வைப்பது பிடிக்கவில்லை. இது என்ன நியாயம்? 
அரசியல்வாதிகளை குறைகூறுகின்ற இவர்கள்தான் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அவர்களுடைய நிருவாகத்தை கூட்டி இந்த முறை நாம் எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என்றெல்லாம் தீர்மானித்துக் கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த நிருவாத்தில் இருக்கின்ற அவர்களின் குருக்களில் ஒருவர் கள்ளத்தனமாக வேறுபெயரில் அரசியல் பற்றி வெளியிட்ட துண்டுப் பிரசுரமும் இருக்கிறது. மறுபக்கத்தில்> அரசியலையோ அல்லது அரசியல் வாதிகளையோ எதிர்த்துப் பேசுவதும் அரசியல்தான் என்பதனை பிரசங்கி புரிந்து கொள்ள வேண்டும். ஆக நேற்று பிரசங்கி பேசியதும் ஒர அரசியல் பேச்சுத்தான். ஆனால் அதுவும் இஸ்லாமிய அரசியலல்ல ஏனெனில் இஸ்லாம் இருந்தால்தான் அதனை இஸ்லாமிய அரசியல் எனக் கூற முடியும். இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சினைக்குரிய பள்ளிவாயல்களில் மிக அதிகமானவை இந்த தௌஹீத் ஐமாத்தின் பண இறைப்பில் அமைக்கப்பட்டன என்பதோடு யதார்த்தத்தில் நாட்டு அரசு முஸ்லிமகளுடைய பள்ளிவாயல்களை ஒழுங்கமைக்கும் பொருட்டு சில ஒழுங்கு நடவடிக்கைகளை செய்துவருகிறது. பேருவளை பிரச்சினையின் பின்னர், இவ்வாறான அரசின் நடவடிக்கை இவர்களுக்கு உதைக்கிறது என்பதனால் இவர்கள் சிங்கள அரசை எதிர்த்து எமது குத்பாக்களை வீணடிக்கிறார்கள். இதற்கு எமது ஊரும் மிக்க சான்று(சான்றுகளை கூற பத்தி காணாது).
நான் முதற் பந்தியில் கூறியது போன்று> தேவையில்லாத விடயங்களுக்கெல்லாம் புதிது புதிதாக சிந்திக்கின்ற இந்தக் கொள்i() கூட்டம் முக்கியமான விடயங்களை ஆராய்வது கிடையாது. இனியாவது பிரசங்கிகள் பேசுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னதாக தயாராகிக் கொண்டு மிம்பருக்கு வருது நல்லம். ஒருவேளை> அடுத்த பெருநளைக்கு நேற்று தொழுகை நடாத்திய இடத்திற்கு அனுமதி கேட்டுச் செல்ல> அதன்போது அந்த அலுவலர் நீங்கள் முன்னய சந்தர்பத்தில் அரசு சிங்கள தீவிரவாதத்தை முஸ்லிம்கள் மீது திணிப்பதாக கூறியுள்ளீர்கள் இதனால் மைதானத்தை வழங்க கூடாது மேலிடத்திலிருந்து அழுத்தம் என கூறினால் அரசு பிழை என்பீர்களா? அல்லது> நீங்கள் நேற்று பிறை எப் எம்மில் ஆற்றிய உரை தொடர்பாக உங்களை விசாரணைக்காக கைது செய்கிறோம் எனக் கூறினால் அதற்கு பெயர் அரசு முஸ்லிம்களின் மார்கக் கடமைகளை செய்ய தடைவிதிக்கிறது என்று கூறுவீர்களா? இவ்வளவும் நீங்கள் பேசிய பின்பு இன்று வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் இந்த சிங்கள அரசு உங்களுக்கு தந்துள்ள சுதந்திரமும்> உரிமையும்தான் என்பதனை மறந்துவிட்டு பிரசங்கம் நடாத்த கூடாது.   
இப்படியான காழ்ப்புணர்வு சிந்தனையாலும்> வழிகாட்டலினாலும்தான் இற்றைக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன் இந்த பிரிவினர் இந்த கிராமத்து மண்ணில் கால்பதித்தும்> கொள்கையை உருப்படியாக பின்பற்றுகின்ற ஒருத்தனையாவது உருவாக்க முடியாமல் போயிருக்கிறது. இதற்கு காரணம்> அறிவில்லாத வழிகாட்டல்> பின்பற்றுவதற்கென மடத்தனமான ஒரு கூட்டம்> இஸ்லாம் மார்க்கம் என்பது மிம்பரில் மட்டும் என்கின்ற எண்ணம்> நாங்கள் இஸ்லாத்தை படிப்பதற்கு எமக்குள் வெளியாகின்ற மாதாந்த சஞ்சிகைகள் போதும் என்கின் மனப்பாங்கு> குத்பாவுக்கு எமது பள்ளிக்கு வருபவர்கள் எல்லாம் எமது கொள்கை சகோதரர்கள் என்கின்ற மாயை> இவை எல்லாவற்றையும் விட கணக்கு வளக்கு கேட்க யாருமில்லாது ஒர சில அரபு நாடுகளில் இருந்து வருகின்ற பணம் மற்றும் இஸ்லாத்தை விட தாம் வைத்திருக்கின்ற திட்டம் நிறைவேறினால் போதும் என்கின்ற மறைமுக சித்தாந்தம்.
அடுத்ததாக> பெருநாள் தின தொழுகை என்பது அதன் போதான தொழுகை மற்றும் பேருரை இரண்டினையும் உள்ளடக்கியது. வெறுமனே தொழுதுவிட்டு சென்றால் அது பூரணமடையாது. நேற்று பேருரை இடம்பெற்றிருந்தாலும் அது இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் இல்லாததன் காணரமாக அந்த பாவமும் இவர்களையே சாரும். எனவே> நேற்று நாம் திடலில் தொழுத தொழுகை> திட்டலுடன் நிறைவு பெற்றதனால் அல்லாஹ்விடத்தில் திடமில்லாத தொழுகைதான்.
இவர்கள் ஓன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலவற்றை நியாயப்படுத்த முடியாது> சிலவற்றை நியாயப்படுத்துவதும் கூடாது. இன்னும் சிலவற்றை புரிந்து கொள்ள வேண்டும்> சிலவற்றை புரியவைக்க கூடாது.
 

Browse