06 July 2016
இன்று இடம்பெற்ற பெருநாள் குத்பாவானது ஊரிலுள்ள சிலருக்கு உறைக்கும்படியாக இருந்திருக்க வேண்டும். மார்க்கத்தினை பயன்படுத்தி மக்களை மயக்குபவர்களுக்கும், மார்க்க போதனைகளை கூறி மக்களை திசை திருப்புபவர்களும், மக்கள் நலன் பேசும் வீராப்பு பயல்களும் இக்குத்பாவினை கேட்டிருக்க வேண்டும்.
குத்பாவின் கரு இறைவன் முன்னிலையில் உண்மையான வெற்றியாளர்கள் யார் என்பதாகும். ஈமான்கொண்டு, சாலிகான நற்காரியங்களை மேற்கொண்டு, சமூகநலண்கள் பேணுபவர்களே வெற்றியாளர்கள் என்பது இஸ்லாத்தின் போதனை. எத்தனை நல்லமல்கள் செய்தாலும், அவற்றை புரிகின்றோம் என்ற அகம்பாவத்தில் அலைபவர்களின் உள்ளங்கள் அசுத்தக் கிடங்காகும். எனவே இத்தகை அடையல் நிரம்பிய உள்ளங்களால் சமூகநலன் என்பது வெறும் சுயநலனே என்பதாக குத்பா விபரித்தது.
சமூகநலன் என்பதன் தாட்பர்யம் நன்மையை ஏவி தீமையை தடுப்பதாகும். நன்மை புரிகின்றோமாயினும் அதன் தூய்மை அந்நபர் கொண்டுள்ள உள பரிசுத்தத்தில் தங்கியுள்ளது. தற்காலத்தில் சிலர் தமது சுய இலாபங்களுக்காகவும், புகழுக்காகவும், பெயருக்காகவும், சுயகுடும்ப நலத்திற்காகவும் சிலர் சமூகநலன் என்ற போர்வையில் வலம் வருவதாயும், தம்மை சமூகநலவாதிகள் எனவும் சூழுரைக்கின்றனர். இவை யதார்த்தத்தில் சமூகநலனே அல்ல என பிரசங்கத்தில் கூறப்பட்டது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் சமூக நலண் காக்கவேண்டும், தனியுரிமை கொண்டாட வேண்டும் என இஸ்லாம் பணிக்கவில்லை. அது தூய்மையின் அடையாளமும் அல்ல. மாறாக, சமூகநலண் என்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதான கடமை.
எமக்கு நேர்ந்தால்தான், அல்லது எமது குடும்பத்தில் ஒருவனுக்கு நேர்ந்தால்தான் அது அநியாயம் எனும் போக்கு ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கின்ற செயல். எமது முஸ்லிம் சமூகத்தில் இடம்பெறுகின்ற அநாச்சாரங்களையும், அசிங்கங்களகயும், துர்காரியங்களையும், ஏமாற்று காரியங்களையும், இத்தகைய பித்தலாட்ட கும்பல்களையும் குறித்து புரிந்தும் புரியாதவர்களாயும், அறிந்தும் அறியாதவர்களாயும் மெளனியாக ஒரு கூட்டம் எம்மத்தியில் உள்ளனர் எனவும் அவர்களே எம்மத்தியல் 'ஊமைச் சாத்தான்களாக' வலம்வருகின்றனர் எனவும் குத்பா பிரசங்கம் குறிப்பிட்டு கூறியிருந்தது.
இத்தகைய நிலமைகள் குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் விழிப்பாயிருக்க வேண்டும். இறைவனிடம் மேற்போந்த விடயங்கள் குறித்து நாம் பதிலளிக்காது சுவனத்தை நெருங்க முடியாது எனவும் வெற்றியாளர்களாக அன்றி யாரும் சுவனம் நுளைய முடியாது என அழுத்தி குறிப்பிட்டு குத்பா நிறைவுற்றது.
சூறத்துக்களை வைத்து மக்கள் மத்தியில் சூனியமாடும் நபர்கள் இஸ்லாம் கூறும் வெற்றியாளர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவை பற்றி அறிந்திருப்பின் அவர்களின் உளத்தூய்மை அவர்கள் செயல்களில் பிரகாசித்திருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment